தெய்வமகள் சீரியலில் சீரியஸான காட்சியில் நடிகை ஒருவர் சிரித்திருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தவகையில் இல்லத்தரசிகளின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக இருந்தது தெய்வமகள். இந்த தொடர் 2013 ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ் குமரன் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்தத் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மீண்டும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரை தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பி இருந்தார்கள்.
தெய்வமகள் சீரியல்:
மேலும், இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை நிவிஷா. இந்நிலையில் தெய்வமகள் சீரியலில் நிவிஷா நடித்த ஒரு காட்சி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெய்வமகள் சீரியலில் ஒரு சீரியஸான காட்சியின் போது நிவிஷா அழுவதற்கு பதில் சிரித்த மாதிரியே நடித்து இருப்பார். அது பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது. தற்போது அந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.
சத்தமா சிரிச்சிட்டேன்..😂🙌🏻🔥 pic.twitter.com/QtFShStE81
— தளபதி ரிஷி ツ (@ThalapathiRISHI) June 5, 2024
நிவிஷா பற்றிய தகவல்:
அதோடு நடிகை நிவிஷாவையும் கிண்டலடித்து வருகிறார்கள். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நிவிஷா. இவருடைய சொந்த ஊர் அறந்தாங்கி. இவருடைய அப்பா விவசாயம் செய்கிறார். இவர்களுடைய குடும்பத்திற்கு மீடியா, சினிமா என்று எந்த தொடர்பும் கிடையாது. இருந்தாலும், இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
நிவிஷா மீடியா பயணம்:
அதற்கு பின் கல்லூரி படிக்கும்போதே இவர் நிறைய ஷார்ட் பிலிம் எல்லாம் நடித்திருந்தார். அப்படித்தான் இவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால், இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. அதற்குப் பிறகுதான் இவர் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த தெய்வமகள் சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நிவிஷா நடித்த சீரியல்கள்:
அதனைத் தொடர்ந்து இவர் ஓவியா, சிவகாமி, முள்ளும் மலரும் போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அதன் பின் பெரிதாக இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் இவருடைய புகைப்படங்கள் எல்லாம் கிளாமராக இருக்கும். அதோடு இவர் படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.