அங்கே போனா என்னை ‘இவன் தமிழன்’ கிண்டல் செய்தார்கள் – தெய்வமகள் சீரியல் நடிகரின் தற்போதைய நிலை.

0
676
deivamagal
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தவகையில் இல்லத்தரசிகளின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக இருந்தது தெய்வமகள். இந்த தொடர் 2013 ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ் குமரன் என்பவர் இயக்கியிருந்தார். அதோடு இந்தத் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மீண்டும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரை தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

தெய்வமகள் கோபாலகிருஷ்ணன் :

மேலும், இந்த தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சுப்பிரமணியம் கோபாலகிருஷ்ணன். இவர் வள்ளி, அஞ்சலி போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு என்று ஒரு அடையாளத்தை கொடுத்தது தெய்வமகள் சீரியல் தான். இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். ஆனால், சமீபகாலமாக இவர் தமிழில் எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை.ஏன்னா, இவர் தற்போது மலையாள தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

- Advertisement -

தமிழ் சீரியலை விட்டு செல்ல காரணம் :

இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பிரபல சேனல் பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் கூறி இருப்பது, தமிழில் அஞ்சலி சீரியல் முடிந்ததும் எனக்கு கேரளா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. பின் தமிழ், மலையாளம் இரண்டையும் பேலன்ஸ் பண்ண என்னால் முடியவில்லை. அதனால் நம்ப மொழியில் சாதிக்க முடியலை என்பது எனக்கு ரொம்ப வருத்தமாகவே இருந்தது. மலையாளத்தில் என்னுடைய முகம் பரவலாக மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்துவிட்டது.

60 எபிசோட் நடித்து நின்று போன சீரியல் :

அதுமட்டுமில்லாமல் தமிழில் நன்றாக நடிக்கணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு சரியாக அமையவில்லை. அதற்கான ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ​எந்த கதாபாத்திரம் இருந்தாலும் எனக்கு ஓகே தான். வள்ளி சீரியலில் நான் லீட் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. எனக்கு ஜோடியாக நடிக்க இருந்தவர் திடீரென்று வெளிநாடு போக வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கதையை வேற மாதிரி மாற்றி கொண்டு போய்விட்டார்கள். அதனால் என்னுடைய கதாபாத்திரமும் நின்றுவிட்டது.

-விளம்பரம்-

தமிழன் என்பதால் கேலி :

அந்த சீரியலில் 60 எபிசோடு மட்டும்தான் நான் பண்ணினேன். சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் நான் டப்பிங்கும் பேசுவேன். அத்திப்பூக்கள் சீரியலில் நான் டப்பிங் பேசி இருக்கேன். இதனால் பல சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், சீரியல் மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு டப்பிங் பேசியும், நடித்தும் இருக்கேன். அதோடு நான் டப்பிங் யூனியனில் மெம்பராக இப்போது வரை இருக்கிறேன். ஆனால், நான் டப்பிங் பேசி கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிறது. வாய்ப்புக்காக மலையாளத்தில் நான் நடிக்க போனபோது ‘இவன் தமிழன்’ என்று சொல்லி வெளிப்படையாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.

​மலையாளத்தில் செட்டில் :

நான் அங்கேயே மலையாளம் கற்றுக்கொண்டு இப்போ அங்கு யாரும் என்னை தமிழன் என்று நம்ப முடியாத அளவிற்கு மாறி இருக்கிறேன். இப்ப எல்லோரும் என்னை மலையாளி என்றுதான் நினைக்கிறார்கள். மேலும், தமிழில் நல்ல ப்ராஜக்ட் கிடைத்தால் கண்டிப்பாக நடிக்க வருவேன். அதற்காகவும் நான் காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேட்டி அளித்து இருந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Advertisement