பொது நிகழ்ச்சிக்கு படு மெல்லிய உடையில் சென்ற வாணி போஜன்.. ஹீரோயினா ஆகிட்டாங்கயில்ல..

0
141427
vani Bhojan
- Advertisement -

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் வைத்துள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியிலிருந்து சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன் ரியோ ரக்சன் வரை பல்வேறு நடிகர் திலகம் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் ஆனால் சன் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் நடிகைகளின் பட்டியல் மிகவும் குறைவுதான் அந்த வகையில் சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியலில் நடித்து வந்த வாணி போஜன் விதிவிலக்காக இருந்து வருகிறார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். அதிலும்,ரசிகர்கள் சத்யா என்பதைவிட தாசில்தார் என்று தான் அவரை அதிகம் அழைப்பார்கள்.

-விளம்பரம்-
Image

சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக ஆரம்பத்தில் நடிகை வாணி போஜன், கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார். மேலும், பல்வேறு விளம்பரபடங்களிலும் நடித்து வந்தார் அம்மணி. அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

இதையும் பாருங்க : என்னை சீரழத்தது இந்த நடிகர் தான்.. இறுதியில் போட்டுடைத்த நடிகை ஆண்ட்ரியா..

- Advertisement -

சீரியலில் நடித்து வந்த வாணிபோஜனுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமே அம்மணி அடுக்கடுக்காக பல்வேறு போட்டிகளை நடத்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தான். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பல்வேறு சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்தார். அப்படி கிடைத்த வாய்ப்புதான் தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ள மீக்கு மாத்திரமே செப்தா என்ற திரைப்படம். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்து வருகிறார். இதை தவிர தமிழில் விரைவில் வெளியாக உள்ள ஓ மை கடவுளே என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் அம்மணி.

Image
Image
Image

இப்படி தொடர்ந்து இவரது நடிப்பில் விரைவில் இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் மிகுந்த குஷியில் இருந்து வருகிறார் வாணி போஜன். இதுமட்டுமல்லாமல் தற்போது கதாநாயகி ஆகி விட்டோம் என்ற சந்தோஷத்தில் மிதந்து வரும் வாணிபோஜன் ஸ்டைலும் படுஜோராக மாறியுள்ளது. இதற்கு முன்பாக பொது நிகழ்ச்சிக்கு சென்றால் மிகவும் போர்த்திக் கொண்டு செல்லும் வாணி போஜன். கடந்த சில காலமாக பொது நிகழ்ச்சிக்கு மிகவும்ஓப்பனான உடைகளில் தான் செல்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வாணி போஜன் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து வந்திருந்தார். இந்த ஆடையில் அவரைக் கண்ட பலரும் வாணி போஜன் இது என்று கேட்கும் அளவிற்கு படு மாடர்னாக மாறி இருக்கிறார் அம்மணி. தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement