தென்னிந்திய சினிமா திரை உலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் இருந்தார். அதற்கு பின்னர் தான் சினிமாவில் நடிகையாக மாறினார்.அதுமட்டும் இல்லைங்க பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் மூலம்தான் ஆண்ட்ரியா மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார். ஆண்ட்ரியா அவர்கள் சினிமா உலகில் ஆரம்பத்தில் பாடகியாக தான் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் பாடியதற்கு பிறகு தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதோடு ஆண்ட்ரியா அவர்கள் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப்படி கலகலப்பாக போய்க்கொண்டு இருக்கும் ஆண்ட்ரியா வாழ்க்கையில் என்ன தான் நடந்தது? சமீபகாலமாகவே ஆண்ட்ரியா குறித்து பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளன.
ஆண்ட்ரியாவின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்து சோகமான சம்பவங்களை குறித்தும் ஆண்ட்ரியா இணையங்களில் பதிவிட்டுள்ளார். அது என்னன்னா, நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார். இந்த நிகழ்ச்சியில் சோகமான பாடல்களையும் மற்றும் காதலால் தோல்வியுற்ற ஆண்களைப் பற்றியும் மட்டும் பாடி வந்தார். இதனால் ரசிகர்களுக்கு பல சந்தேகங்கள், கேள்விகள் எழுந்தன. இது குறித்து பல பேர் ஏன் நீங்கள் சோகமான பாடல்களை அதிகம் பாடுகிறீர்கள் ? என்று ஆண்ட்ரியாவிடம் பயங்கரமாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு ஆண்ட்ரியா சொல்லிய பதில், நாசா வெடிகுண்டு வெடித்ததை விட மோசமான குண்டை போட்டு ரசிகர்கள் மனதை சுக்குநூறாக உடைத்தார்.
இதையும் பாருங்க : கைவிட்ட சினிமா, கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்.. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..
அதுகுறித்து ஆண்ட்ரியா கூறியது, திருமணமான சமயத்திலேயே நான் அரசியல்வாதி நபருடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தேன். அவரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் சிறிது காலம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தேன் என பகிரங்கமான பேட்டியில் கூறியிருந்தார். எந்த நடிகையும் இப்படி ஒரு விஷயங்களை பகிரங்கமாக மேடையிலோ அல்லது ஊடகங்களிலும் கூட கூற மாட்டார்கள். ஆனால், ஆண்ட்ரியா எந்த துணிச்சலுடன் கூறினார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் யார்? யார்? என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை நான் எழுதிய “ப்ரோக்கன் விங்ஸ்” புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு உள்ளேன் என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தார். இதனை அந்த அரசியல்வாதியும் கேட்டிருப்பார்.
அதோடு அதிர்ச்சியில் உறைந்து இருப்பார் என்று கூறுகின்றனர். சரியாக கடந்த ஒரு மாதமாகவே நான் அவர் யார்? என்று சொல்கிறேன், சொல்கிறேன் என்று புதிர் மேல் புதிர் போட்டு கொண்டு அனைவரையும் ஏமாற்றி இருந்தார். அதனால், ரசிகர்கள் கோபம் அடைந்து எப்பதான் சொல்லப்போறீங்க? என கேட்டு வந்தார்கள். இதனால் கோடம்பாக்கத்து ஏரியாவே காத்துக்கொண்டிருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். ஆக மொத்தம் ஆண்ட்ரியாவின் மூலம் ஒரு முக்கிய புள்ளி சிக்க போகிறார். ஆண்ட்ரியாவின் மூலம் ஒரு சிறப்பான சம்பவம் நிகழ போகிறது என கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.