பாடல் உரிமை இளையராஜாவுக்கு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்து இருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவர் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தில் இசை அமைத்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.
மேலும், இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய இசை திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றும், முறையாக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா குறித்த தகவல்:
இவர் சினிமா உலகில் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர். தற்போதும் இவர் படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும், இளையராஜாவின் இசையில் உருவான மூடுபனி திரைப்படத்தில் ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. தற்போது இந்த பாடலை தான் யுவன் சங்கர் ராஜா ரீ கிரியேட் செய்திருக்கிறார். இந்த பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். தற்போது இந்த பா. விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அகத்தியா’ படத்தில் இடம்பிடித்து இருக்கிறது.
அகத்தியா படம்:
இந்த படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிகளில் இந்த படம் பேண்டஸி ஹாரர் பாணியில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் தான் என் இனிய பொன் நிலாவே பாடலை யுவன் சங்கர் பயன்படுத்தி இருக்கிறார். இந்த பாடலின் உடைய ஒரிஜினல் வெர்ஷனை பின்னணி பாடகர் ஏசுதாஸ் பாடியிருந்தார்.
இளையராஜா பாடல் விவகாரம்:
தற்போது இந்த பாடலை ஏசுதாஸ் மகனான விஜய் ஏசுதாஸ் பாடி இருக்கிறார். மேலும், மூடுபனி படத்தினுடைய பாடல்களின் காப்பிரிமையை சரிகமப நிறுவனம் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பாக சரிகமப நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அதில், எங்களிடம் உரிய அனுமதியை வாங்காமல் என் இனிய பொன் நிலாவே பாடலை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அகத்தியா படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த பாடல் அறிவிப்பு வெளியான உடனே நாங்கள் நோட்டீஸ் அனுப்பி இருந்தோம்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு:
அதையும் மீறி அந்த பாடலை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறி இருந்தார்கள்.
இதை எடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வேல்ஸ் நிறுவனம், என் இனிய பொன் நிலாவே பாடலை ரீகிரியேட் செய்வதற்கு அப்பாடலை இசையமைத்த இளையராஜாவிடம் காப்புரிமையே வாங்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமை சரிகமப நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆதலால் அதற்கான உரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது என்று தீர்ப்பளித்து இருக்கிறது.