தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் உயர்ந்து உள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.
கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து ஹீரோ என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் டாக்டர், அயலான் என்று பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவ்வளவு ஏன் 2019 ஆம் ஆண்டு சென்னை டைம்ஸ் நடத்திய சர்வேயில் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமடைந்த ஆண் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் முதல் இடத்தை பிடித்து இருந்தார் சிவகார்த்திகேயன்.
சினிமாவைப் பொருத்தவரை மாஸ் நடிகர்கள் அனைவருமே புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளில் கட்டாயம் நடித்திருப்பார்கள் ரஜினி முதல் விஜய் அஜித் வரை பலரும் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் மது அருந்தும் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் அதே போல சிவகார்த்திகேயன் சினிமாவில் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்வில் ஒரு டீட்டோடேலர் ஆக இருந்து வருகிறார் அதனை அவரே மேடையில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
என்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் விஷயம் என்றால் இரண்டு விஷயத்தை மட்டும் தான் சொல்லுவேன் அதைத் தாண்டி நான் வேறு எதையும் நினைத்து நான் பெருமை அடைந்தது கிடையாது இன்றுவரை நான் சிகரெட் பிடிப்பது கிடையாது தண்ணி அடித்தது கிடையாது அதற்கு காரணம் என்னுடைய நண்பர்கள்தான் என்னுடைய நண்பர்கள் எப்போதும் வாடா எங்கே போகலாம் அங்கே போகலாம் என்று என்னை கூப்பிட்டது கிடையாது உங்களையும் உங்கள் உடலையும் உங்கள் அப்பா அம்மா சம்பாதித்த காசு கொடுத்து உங்கள் உடலை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள் இந்த அட்வைஸ் கேட்க கசக்கும் ஆனால் நீங்கள் குடிக்கும் குடியும் கசக்கிறது தானே எனவே அதை விட்டு விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இதற்கு திருநெல்வேலி டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன் சிவகார்த்திகேயனின் இந்த பண்பை பாராட்டியுள்ளார் அதில் அவர், நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க . குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான்.
இளைய சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் உங்களின் உணர்வுப்பூர்வமான வழிகாட்டுதல்கள் தொடரட்டும். அன்பும் நன்றியும் என்று பதிவிட்டுள்ளார். அர்ஜுன் சரவணனின் இந்த பாராட்டிற்கு சிவா கார்த்திகேயன் நன்றி தெரிவித்ததோடு, உங்கள் அன்பும் வாழ்த்தும் ஊக்கப்படுத்துகிறது சார்.. நன்றி அன்பை விதைப்போம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சிவகார்த்திகேயனின் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இதே அர்ஜுன் சரவணன் தான் அஜித்தை பல முறை பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.