என் நடிப்பை சுத்தமாக வெறுத்தார் தனுஷ் – ஓப்பனாக கூறிய நயன்தாரா. வைரல் வீடியோ.

0
933
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் கொண்ட தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா லீட் ரோலில் நடித்து பல்வேறு படங்களில் ஹிட் கொடுத்திருக்கிறார் அதேபோல எந்த படம் எடுத்தாலும் நடிகை நயன்தாராவின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது ஆனால் நயன்தாராவின் நடிப்பு தனுஷுக்கு பிடிக்கவில்லை என்று நயன்தாரா கூறியிருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.நடிகை நயன்தாரா, தனுசுடன் இணைந்து ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு ஒரு மிகப்பெரிய பெயரையும் வாங்கிக் கொடுத்தது இந்த படத்திற்கு பின்னர் தனுஷ் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் நடிகை நயன்தாரா குத்தாட்டம் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது

- Advertisement -

இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நயன்தாராவின் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படமாகத்தான் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா காதுகேளாத பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று இருந்தார். ஆனால், இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு தயாரிப்பாளரான தனுஷிற்கு பிடிக்கவில்லை என்று நயன்தாரா விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாரா சிறந்த நடிப்பிற்கான பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்திற்காக நடிகை நயன்தாரா சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்று இருந்தார். இந்த விருதை வாங்கி விட்டு பேசிய நடிகை நயன்தாரா ‘நான் தனுஷுக்கு சாரி சொல்ல வேண்டும். ஏனென்றால் நடிகர் தனுசுக்கு என்னுடைய நடிப்பு இந்தப் படத்தில் சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே, உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் தனுஷ், கண்டிப்பாக அடுத்த முறை நான் சிறப்பாக செய்வேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement