இரண்டாம் உலகம் படத்தில் முதலில் நடித்தது இந்த ஜோடி தான். படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.

0
3341
irandamulagam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் எப்போதும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். தமிழ் சினிமா உலகில் திறமையான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் திறமைக்கு இவருடைய படங்கள் தான் உதாரணம். இவருடைய ஒவ்வொரு படங்களும் காவியமாக உள்ளது. ஆனால், என்ன ஒன்று இவர் இயக்கத்தில் வரும் படங்கள் எல்லாம் காலம் கடந்து தான் மக்களிடையில் பேசப்படுகிறது. அப்படித்தான் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் வெளியாகும் போது யாரும் கண்டுகொள்ளவில்லை.

-விளம்பரம்-
Irandam Ulagam Story & Maalai Nerathu Mayakkam Tamil Movie, Music ...

- Advertisement -

ஆனால், ரசிகர்கள் தற்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் செய்ய உள்ளிர்கள் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் செல்வராகவனின் இன்னொரு படைப்பாக இருந்தது இரண்டாம் உலகம் படம். யாரும் யோசிக்க முடியாத அளவிற்கு வினோதமான கற்பனை படைப்பாக இது அமைந்தது.

இந்த படம் அதனாலேயே பலருக்கு புரியாமல் போனது என்றும் சொல்லலாம். 2013 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் இரண்டாம் உலகம். இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இருவேறு உலகங்களில் நடக்கும் கதை தான் இரண்டாம் உலகம் படம்.

-விளம்பரம்-
Cinemapatti on Twitter: "Guess the Dropped Movie ?… "

அனுஷ்கா, ஆர்யா இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்வது போல் திரைக்கதை அமைத்து ஒவ்வொரு காட்சிகளையும் பட்டையை கிளப்பி இருப்பார் செல்வராகவன். இந்நிலையில் அனுஷ்கா, ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது ஆண்ட்ரியாவும், தனுஷ் தான் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷும், ஆண்ட்ரியாவும் தான் இந்த படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டார்கள்.

அதன் பின் சில நாட்கள் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பின்பு தனுஷ், ஆண்ட்ரியா இருவருமே சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதற்கு பிறகு தான் இந்த கதையை ஆர்யா மற்றும் அனுஷ்காவிடம் சொல்லப்பட்டது. பின் இதற்கு இவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டு படம் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் மற்றும் அனிருத் பின்னணி இசை அமைத்திருந்தார். காலம் கடந்தாலும் இந்த படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஒருவேளை இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தால் இந்த படம் இன்னும் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்குமோ?? என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சில நாட்களில் தனுஷ்,ஆண்ட்ரியா நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது/ இதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் தனுசும் ஒருவர். செல்வராகவன் தனுஷின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மீண்டும் தனுஷை வைத்து புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்கப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதை ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement