தனது முறை பெண்ணுக்கு தனுஷ் செய்த முறை. வைரலாகும் க்யூட் புகைப்படம்.

0
71800
dhanush

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார். தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “ஜகமே தந்திரம்”.

- Advertisement -

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தை சசிகாந்த் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான Y Not ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இவர்களுடன் இந்த படத்தில் கலையரசன், சஞ்சனா நடராஜன், வாக்ஸல் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மே 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் பிறந்தநாளை கொண்டாடிய குமரன். வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் இந்தியில் புதிய படமொன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இப்படி சினிமா உலகில் நடிகர் தனுஷ் அவர்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் அதிக நேரம் ஒதுக்குவார். இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது தன்னுடைய சகோதரி மகளுக்கு தாய் மாமன் என்ற முறையில் மடியில் உட்கார வைத்து மொட்டை அடித்து உள்ளார்.

View this post on Instagram

#Dhanush With His Sister's Daughter At #Tirupathi

A post shared by Behind Talkies (@behindtalkies) on

இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் தனுஷ்க்கு, இயக்குனர் செல்வராகவனை தவிர இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். தற்போது தனுஷிற்கு ஷூட்டிங் எதுவும் இல்லாத இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று உள்ளார். அங்கு தன்னுடைய சகோதரி மகள் ஒருவருக்கு தாய்மாமன் என்ற முறையில் தனுஷ் தன்னுடைய மடியில் உட்கார வைத்து மொட்டை அடித்து உள்ளார். அப்போது குழந்தைக்கு தாய்மாமன் என்ற முறையில் தனுஷ் முதல் முடி எடுத்து உள்ளார். தனுஷ் அருகில் இயக்குனர் செல்வராகவனும் அமர்ந்திருக்கிறார். அவரும் மொட்டை போட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இதை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

Advertisement