பாலபிஷேகம் தான பாத்திருப்பீங்க பீர் அபிஷேகம் பார்த்திருக்கீங்களா – தனுஷ் ரசிகர் மன்றம் அலப்பறை. அதுவும் எந்த ஊரில் பாருங்க.

0
699
Dhanush
- Advertisement -

புதுச்சேரியில் தனுஷ் உடைய பேனருக்கு ரசிகர்கள் பீர்-பால் அபிஷேகம் செய்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். பதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது.

- Advertisement -

நானே வருவேன் படம்:

இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நானே வருவேன். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் தனுஷ் அவர்கள் ஒட்டி பிறந்த பிரபு, கதிர் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் கதை:

படத்தில் கதிர் வழக்கமான பிள்ளைகளைப் போல சிறு வயதில் இருந்து வித்தியாசமாக இருக்கிறார். இதன் காரணமாகவே அவருடைய பெற்றோர்கள் கதிரை ஒரு கோயிலில் விட்டு விடுகிறார்கள். பிரபுவை மட்டுமே அவர்களுடன் வைத்து வளர்க்கிறார்கள். பல வருடங்கள் கழித்து பிரபுவுக்கு அழகான மனைவி, அன்பான மகள் என்று சந்தோஷமாக வாழ்கிறார். அப்போது தன் மகள் மீது ஒரு ஆவி இருப்பதை தனுஷ் கண்டுபிடிக்கிறார். அந்த ஆவியிடம் தனுஷ் பேச முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஆவி தனுஷ் இடம் ஒரு கோரிக்கை வைக்கிறது. தனுஷும் அதை செய்ய துணிகிறார்.

-விளம்பரம்-

புதுச்சேரி ரசிகர்கள் செய்த செயல்:

அந்த ஆவி அப்படி என்ன செய்ய சொன்னது? தனுஷ் ஆவி சொன்னதை செய்தாரா? தன் மகளை மீட்டாரா? குழந்தையில் விடப்பட்ட கதிர் தனுஷ் என்ன ஆனார்? என்பதை படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மக்கள் தனுஷின் படத்தை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அதாவது, புதுச்சேரியில் காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் தனுஷ் உடைய ரசிகர்கள் உற்சாகத்துடன் நானே வருவேன் படத்தை வரவேற்று இருக்கின்றனர். புதுச்சேரி நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக வைத்துள்ள பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

வைரலாகும் புகைப்படம்:

பின் பூக்களை தூவி பூசணிக்காய் சுற்றி திருஷ்டியும் எடுத்துகின்றனர். உற்சாகம் தாங்க முடியாத சில ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்திருக்கின்றனர். சிலர் கையில் சூடம் ஏற்றி தனுஷ் படத்திற்கு முன்பு காண்பித்து பட்டாசு வெடித்து மகிழ்ந்துள்ளனர். மேலும், நடுக்கடலில் புதுச்சேரி மாநில நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்தனர். அந்த பேனரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் கொண்டு சென்று தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement