கர்ணனுக்காக ஹோட்டலில் காதை அறுத்த ரவுடி ரசிகர்கள் – தோசைக்காக எழுந்த உரிமை குரலால் நடந்த விபரரீதம்.

0
17467
karnan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இந்த திரைப்படம்.

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : இரண்டாம் கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய நடிகை ராதா – இதான் காரணமாம்.(இதுக்கு புகார் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்)

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கர்ணன் படம் பார்க்க செல்வதற்கு லேட் ஆனதால் ரௌடிகள் இருவர் ஹோட்டல் ஊழியரின் காதை அறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள தேவி திரையரங்கில் கர்ணன் படத்தை பார்ப்பதற்காக இருவர் சென்றுள்ளனர். படத்தை பார்ப்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் திரையரங்கின் அருகில் இருந்த ஹோட்டலில் சாப்பிடலாம் 3என்று சென்றுள்ளனர். உள்ளே சென்ற அவர்கள் படம் போட்ருவாங்க சீக்கிரம் தோசை கொடுங்க என்று சொல்லி ஆர்டர் செய்துள்ளார்கள். தோசை கொண்டுவந்த சப்ளையர் வேறு ஒரு டேபிளுக்கு தோசையை பரிமாறி இருக்கிறார். படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியும் தங்களுக்கு தோசை கொடுக்காமல் எப்படி பக்கத்து டேபிளுக்கு தோசை சென்றது என்று ஆத்திரம் அடைந்துள்ள அந்த இருவரும் கடை ஊழியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

அப்போது ஊழியரோ தாங்கள் தோசை ஆர்டர் செய்தது சரியாக கேட்கவில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அந்த இரண்டு நபரில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சப்ளை என் காதில் வெட்டி இருக்கிறார். இதில் அவரது காது இரண்டாக பிரிந்து உள்ளது. காயமடைந்த அந்த ஊழியர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதையடுத்து ஊழியரை கத்தியால் வெட்டிய அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான அருண்குமார் மற்றும் சபை சிவா என்பது தெரியவந்தது. கர்ணன் படத்தை பார்ப்பதற்காக தோசைக்கு உரிமைக்குரல் கொடுக்க நினைத்து வன்முறையில் ஈடுபட்ட இருவரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement