போண்டா மணிக்கு தனுஷ் அனுப்பிய பணம், எவ்ளோ அனுப்பி இருக்கார் பாருங்க – நன்றி தெரிவித்து போண்டா மணி வெளியிட்ட வீடியோ.

0
981
bondamani
- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். இவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் பாக்யராஜை சந்தித்து சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
bonda

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர் நடிகர் போண்டா மணிசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது.

- Advertisement -

போண்டா மணி அளித்த பேட்டி:

இந்நிலையில் பிரபல சேனல் இவரை நேரில் சந்தித்து பேட்டி ஒன்று எடுத்திருந்தது. அதில் அவர் கூறியது, ஆறு மாதமாகவே என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. பருவ காதல் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் இருக்கும். அதை தத்துரூபமாக எடுக்க வேண்டும் என்று நிஜ சாக்கடையில் என்னை விழ வைத்தார்கள். அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது.மந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையும் பண்ணினார்கள். இருந்தும் தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருந்தேன்.

விவேக் குறித்து உருக்கம் :

அப்போது தான் என்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த விஷயம் தெரிந்தது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு துயரம் ஏற்பட்டது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருந்தார். அப்போது வடிவேலு உங்களை தொடர்பு கொண்டாரா என்று கேட்டதற்கு இல்லை என்று சொன்ன போண்டா மணி, விவேக் சார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நான் யார்கிட்டயும் கையேந்த வேண்டிய அவசியமே வந்து இருக்காது. அவரே ஓடிவந்து உதவியிருப்பார் என்றும்ம் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

போண்டா மணிக்கு குவியும் உதவிகள் :

நடிகர் சங்கம் சார்பில் போண்டா மணியை மனோபாலா நேரில் சென்று சந்தித்து இருந்தார். அதே போல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போன் மூலம் தொடர்பு கொண்டு போண்டா மணி நலம் குறித்து விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார்.இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனுஷ், போண்டா மணிக்கு 1 லட்ச ரூபாய் அனுப்பி உதவி செய்து இருக்கிறார்.

தனுஷ் குறித்து போண்டா மணி :

தனுஷின் உதவி குறித்து மருத்துவமனையில் இருந்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் போண்டாமணி ‘தம்பி தனுஷ் நீங்கள் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணம் எனக்கு வந்து சேர்ந்து விட்டது. ரொம்ப சந்தோஷம், என் சார்பிலும் என் குடும்பத்தின் சார்பிலும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய பணம் இந்த நேரத்தில் எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் எல்லாம் எனக்கு உதவி செய்வது மிகவும் பெருமையாக இருக்கிறது.

Advertisement