ஹிந்தியில் மதுரை தமிழனாக களம் இறங்கும் நடிகர் தனுஷ். அதுவும் இவருடைய படத்தில்.

0
1485
dhanush

தமிழ் சினிமா உலகில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர ஆட்டம் ஆடியது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வெளி வந்தது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் . இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த வருடம் செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார். தனுஷ் அவர்கள் கோலிவுட்டில் மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார். ஏற்கனவே தனுஷ் அவர்கள் இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் என்று சில படங்களில் நடித்து உள்ளார். தற்போது மீண்டும் இந்தியில் புதிய படமொன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஸுக்கு ஜோடியாக இந்தி நடிகை சாரா அலிகான் நடிக்கிறார்.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் அவர்கள் மதுரையை சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் கதை வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சாரா அலிகான் இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து விட்டது. இந்த படம் மே 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும், 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement