ஒரு நாள் ஒரு பெரிய ஹாலிவுட் ஹீரோ உன்னை பார்த்து இப்படி சொல்வார் – Graymanல் வந்த வசனத்தை குறிப்பிட்டு உருவக் கேலிக்கு பதிலடி கொடுத்த தனுஷ்.

0
685
Dhanush
- Advertisement -

தோற்றத்தை வைத்து ட்ரோல் செய்தவர்களுக்கு தனுஷ் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கோலாகலமாக முடிந்த CWC3 – முதல் மூன்று பரிசை வென்ற போட்டியாளர்கள். இதுவரை இல்லாத பரிசுத்தொகை.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர்.

-விளம்பரம்-

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

அதனை தொடர்ந்து இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. தற்போது இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ஃபஹீர் என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து இருந்தார். தற்போது அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி உள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.

தி கிரே மேன் படம் குறித்த தகவல்:

கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் சமீபத்தில் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்துக்காக பல நாட்களுக்கும் மேலாக தனுஷ் அவர்கள் தீவிரமான புரமோஷன் செய்து இருந்தார். மேலும், தனுஷ் நடித்த தி கிரே மேன் படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் தனுசுக்கு சிறிய கதாபாத்திரம் தான் கொடுக்கப்படுகிறது. அதிக எதிர்பார்ப்புடன் இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் என்று சொல்லலாம்.

ட்ரோல் செய்தவருக்கு தனுஷ் கொடுத்த பதிலடி:

இந்த நிலையில் இந்த படத்தின் விளம்பரத்திற்காக தனுஷ் அளித்திருக்கும் பேட்டி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், இளம்வயது தனுசுக்கு நீங்கள் ஒரு அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் என்ன கொடுப்பீர்கள்? என கேட்டிருக்கிறார்கள். அதற்கு தனுஷ் கூறியது, உன்னுடைய தோற்றத்தை வைத்து உன்னை ட்ரோல் செய்பவர்களை நினைத்து வருத்தப்படாதே. ஒரு நாள் ஒரு பெரிய ஹாலிவுட் ஹீரோ உன்னை பார்த்து ‘Sexy Tamil Friend” என்று சொல்லியிருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement