குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தை வைத்து ஸ்ருத்திகா செய்த செயல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. புது வித்தியாசமான முறையில் இந்த சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகம் செய்து இருக்கிறது.
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இருந்தது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.
குக் வித் கோமாளி சீசன் 3 :
மேலும், இந்த நிகழ்ச்சியில் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான். வழக்கம் போல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா,ரோஷினி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்சன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதேபோல் கோமாளியாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 3 பைனல்:
கடந்த இரண்டு சீசனை விட மூன்றாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல வித்தியாசமான கான்செப்ட்களை கொண்டு வந்து இருந்தார்கள். இறுதியில் வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ், கிரேஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். இந்நிலையில் நேற்று கோலகலமாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் தொடங்கி 5 மணி நேரமாக பைனல் நிகழ்ச்சியை ஒளிபரப்பி இருந்தார்கள். 4 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் ஆனார்.
டைட்டில் வின்னர்:
டைட்டில் வின்னர் ஆனதையடுத்து அவருடைய கணவர் அர்ஜுன் ஸ்ருத்திகாவை அலேக்காக தூக்கி தன்னுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், வெற்றி பெற்ற ஸ்ருத்திகாவுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் ரூபாயும், ஒரு லட்சம் ரூபாய்க்கு ப்ரீத்தியின் வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக கொடுக்கப்பட்டது. கோமாளியாக இருந்த புகழுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது புகழ், நான் எப்போதாவது தான் நிகழ்ச்சிக்கு வருகிறேன். இதை நான் பாலாவுக்கு கொடுக்கிறேன்.
புகழ்-ஸ்ருதிக்கா செய்த செயல்:
அவர் ஏழை குழந்தைகளுக்காக உதவுகிறார். அதற்காக இந்த பணத்தை தருகிறேன் என்று சொன்னார். இதைக்கேட்டு ஸ்ருத்திகாவும் தன்னுடைய பரிசு பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாவை பாலாவுக்கு தருவதாக கூறினார். அதன்பிறகு பாலாவுக்கு தனியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த பணத்தை எல்லாம் சேர்த்து பெரம்பூரில் இருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் படிப்புக்கு வழங்குவதாக பாலா அங்கேயே மேடையில் அறிவித்திருந்தார். பலரும் ஸ்ருதிக்கா வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.