குருவி படத்தை கலாய்த்த நடிகர். தனுஷ் கொடுத்த பதிலடி. வைரலாகும் வீடியோ.

0
8191
dhanush
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். விஜய்யின் படங்கள் என்றாலே வசூல் ரீதியாக பெரும்பாலும் சாதனை கிடைத்துவிடும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்த விஜய்யின் குருவி திரைப்படம் குறித்து அசுரன் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா மேடையில் நடிகர் பவன் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன் ‘ திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படம் பூமணி எழுதிய “வெக்கை” என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கிய படமாகும். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசையில் வெளிவந்தது.

இதையும் பாருங்க : இமைக்கா நொடிகள் அனுரங் கஷ்யப்பிடம் விவாகரத்து பெற்று, தற்போது திருமணமாகாமல் கர்ப்பம். அஜித் பட நடிகை.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைபெற்றது இந்த விழாவில் பேசிய நடிகர் பவன், அசுரன் படத்தில் நான் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. பொதுவாகவே திரைப் படங்கள் நூறு நாட்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடுவது என்பது அரிதான ஒன்று. கடைசியாக நான் நடித்த குருவி திரைப்படம் 150 நாட்கள் ஓடியது என்று வெற்றி விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். இவருடைய பேச்சை கேட்டு தனுஷும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தார்.

ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பவன், தனது பேச்சுக்கு விஜய்யிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் பவன் பேசிய பின்னர் தனுஷ் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இது மாதிரி ஒரு விழா நடக்கும்போது நாம் பேசுவது மட்டும் தான் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அதனால் எது சரியோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் எது சரி இல்லையோ அதை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement