தாய் மற்றும் பாட்டியுடன் தனுஷ் எடுத்த செல்ஃபி. வைரலாகும் புகைப்படம்..

0
18434
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் இந்த உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். சினிமா உலகில் இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த “பட்டாஸ்” படம் வேற லெவல் மாஸ் காட்டியது. 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண்கள் குழந்தைகள் உள்ளது. முத்த மகன் யாத்ரா, இளைய மகன் லிங்கா.

இதையும் பாருங்க : எப்பேய், கருணாஸ் மகனா இது ? எப்படி படு ஸ்டைலிஷா மாறிட்டாரு பாருப்பேய்.

- Advertisement -

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் தனுஷ் அவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் தனுஷ் அவர்கள் தன்னுடைய தாய் மற்றும் பாட்டி உடன் எடுத்து கொண்ட செல்ஃபீ. பொதுவாக நடிகர் தனுஷ் அவர்கள் சோசியல் மீடியாவில் தன் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை மட்டும் தான் பதிவிட்டு வந்தார். தற்போது தனுஷ் அவர்களின் தாய் மற்றும் பாட்டி உடன் எடுத்து கொண்ட செல்ஃபீ சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. இது இதுவரை வெளிவராத அறிய புகைப்படம். இதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “ஜகமே தந்திரம்”. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் இந்தியில் ஒரு புதிய படமொன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள். கொரோனா வைரஸின் காரணமாக படப்பிடிப்புகள்,திரையரங்குகள் எல்லாம் மூடிவைக்கப்பட்டு உள்ளது. தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.

Advertisement