எப்பேய், கருணாஸ் மகனா இது ? எப்படி படு ஸ்டைலிஷா மாறிட்டாரு பாருப்பேய்.

0
78491
ken-karunas

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர் நடிகைகள் தற்போது நடிகர் நடிகைகள் அளித்து வருகிறார்கள். கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் என்று பல்வேறு வாரிசு நடிகர்களின் இளம் நடிகர் தலைமுறையாக மாறி இருக்கிறது அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் கருணாஸ் மகனும் தற்போது வீரம் வாரிசு நடிகராக ஜொலித்து வருகிறார். தமிழ் சினிமா துறை உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் திகழ்ந்து வருகிறார்.

ஆரம்பத்தில் காமெடி நடிகராக திகழ்ந்து வந்த கருணாஸ் அதன் பின்னர் வடிவேலு சந்தானம் பாணியில் ஹீரோவாக களமிறங்கினார். தற்போது எம் எல் ஏ வாகவும் அசத்தி வருகிறார் கருணாஸ். நடிகர்கருணாஸ் சினிமா துறையில் பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது மட்டுமல்லாமல் கிரேஸ் அவர்கள் “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு.., ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம்..” போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இதையும் பாருங்க : மூன்றாம் நிலை கொரோனாவா? அரை குறை ஆடையில் ஆட்டம் போட்டு ரித்திகா பதிவிட்ட வீடீயோவை கலாய்க்கும் ரசிகர்கள்.

- Advertisement -

இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். அதிலும் முக்கால்வாசி பாடல்கள் குத்து பாடல்கள் தான். ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. கிரேஸ் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இவர் பாடிய கிறிஸ்தவ பக்தி பாடல்கள், குத்து பாடல்கள் மற்றும் கிராமிய பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை.

டிகர் கருணாஸ் -கிரேஸ் ஆகிய தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளார்கள். மேலும், மகள் பெயர் டயானா மற்றும் மகன் பெயர் கென் கருணாஸ். இதில் கென் கருணாஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ரகளபுரம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் அழுகு குட்டி செல்லம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : ‘பொய்கள் நிறைந்த உலகம்’ இணையத்தால் உலா வந்த சர்ச்சை வீடியோ. மறைமுகமாக பதில் அளித்த லாஸ்லியா.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் நடிகர் கென் கருணாஸ் சமீபத்தில் மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement