போயஸ் கார்டனில் வீடு கட்டினது தப்பா? – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

0
505
- Advertisement -

போயஸ் கார்டன் சர்ச்சை குறித்து தனுஷ் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருந்தது. தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘ராயன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

- Advertisement -

ராயன் படம்:

இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் தனுஷ், நான் முதன் முதலாக படத்தில் நடிக்கும் போது இந்தளவிற்கு வருவேன் என்று நினைக்கவே கிடையாது.

இசை வெளியீட்டு விழா:

காரணம், அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், துரோகங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதை எல்லாம் தாண்டி தான் நான் இங்கு இருக்கிறேன். அதற்கு காரணம் நீங்கள் கொடுக்கும் இந்த கரகோஷம் தான். ஆங்கிலம் எனக்கு ஒழுங்காகவே பேச வராது. ஆனால், என்னை ஹாலிவுட்டில் நடிக்க வைத்தீர்கள். இந்த படத்தினுடைய கதையை நான் தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் சொன்னபோது, அவர் எந்த ஒரு இடத்திலும் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. இதனால் நான், நம்முடைய கதை நன்றாக இல்லையோ என்று நினைத்துக் கொண்டேன்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

கதையை சொல்லி முடித்த பிறகு அவர் இந்த படத்தை நாம் செய்யலாம் என்று சொன்னார். அதற்குப் பின் ஏ.ஆர்.ரகுமான் சாரிடம், இது என்னுடைய 50-வது படம். இந்த படத்தில் உங்களுடைய பெயர் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் இரண்டு நாள் கழித்து சொல்வதாக சொன்னார். அதே போல் இரண்டு நாள் கழித்து அவர், 30 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் ஓகே என்று சொன்னார். பிரகாஷ்ராஜ் சார் ‘திருவிளையாடல்’ படத்தில் தான் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தோம். ஆரம்பத்தில் அவரைப் பார்த்து நான் பயந்து ஓரமாக எல்லாம் நின்றிருந்தேன். இந்த படத்திற்காக அவரிடம் பேசும் போது நான் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

செல்வராகவன் குறித்து சொன்னது:

அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டான். அவர் எப்போது வரவேண்டும், சொல் வருகிறேன் என்றார். எஸ்.ஜே.சூர்யா சாரும் நான் கேட்டு கொண்டதற்காக நடித்தார். இவர்களைத் தொடர்ந்து படத்தில் எல்லா நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தார்கள். கடைசியில் ஒன்றுமே தெரியாத என்னை நடிகன் ஆகியது என்னுடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தான். அவர்தான் என்னுடைய ஆசான், குரு. கண்ணம்மா பேட்டையில் ஒரு குடிசை வீட்டில் தான் நாங்கள் இருந்தோம்.

போயஸ் கார்டன் வீடு:

இன்று போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பது அவர்தான். போயஸ் கார்டனில் என் வீடு இவ்வளவு பெரிய சர்ச்சையாக பேசும் பொருளாக இருப்பது தெரிந்திருந்தால் நான் அங்கு வீடே கட்டி இருக்கவே மாட்டேன். நான் யாருடைய ரசிகர் என்று எல்லோருக்குமே தெரியும். ரஜினி சார் வீடு போயஸ் கார்டன் இருக்கிறது. எனக்கு 16 வயது இருந்தபோதே போயஸ் கார்டன் தெருவுக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த ரஜினி சார் வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போலீஸ்காரர்களிடம் அனுமதி வாங்கி வீட்டையும் பார்த்தேன். அப்போது அங்கு ஒரு சின்ன வீட்டையாவது கட்டிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். இப்போது அது நினைவாகி விட்டது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement