தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தெடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா,யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Advertisement

இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.மேலும் அனைவரும் எதிர்பார்த்தபடி ஜெயிலர் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படத்தை லேட்டாக ரிலீசாகி இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இந்த படத்தை முன்னாடியே ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதேபோல் அமெரிக்கா, துபாய் போன்ற பிற நாடுகளில் ஜெயிலர் படம் முன்னதாக ரீலிஸ் ஆகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்பது மணிக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இதற்கு தமிழ்நாட்டில் விதித்த சட்ட திட்டங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் படம் தாமதமாக வந்தாலும் ரசிகர்கள் பலரும் FDFS காண காலை முதலே திரையரங்கில் குவிந்தனர். அதே போல பல்வேறு பிரபலங்களும் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை காண திரையரங்கிற்கு வந்தனர். அந்த வகையில் ரஜினியின் முன்னாள் மாப்பிள்ளையான தனுஷ் ஜெய்லர் படத்தின் பர்ஸ்ட் ஷோவை காண வந்துள்ளார்.

Advertisement

இன்று சென்னையிலுள்ள திரையரங்கு ஒன்றில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தார். திரையரங்குக்கு அவர் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதே போல இதே திரையரங்கில் தான் அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவும் படம் பார்க்க வந்துள்ளார்கள். மேலும், திரையரங்கில் ரசிகர்கள் முன்பு ‘ஹக்கும் பாடலை ‘ பாடி வைப் செய்தார் அனிருத். மேலும் அனிருத் அந்த பாடலை பாட அதனை ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் படம் குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறர்கள். அதில் ஒருவர், ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் வில்லனையும், ஜெயிலர் படத்தின் வில்லனையும் ஒப்பிட்டு பதிவு போட்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஜெயிலர் படத்தை ஒரே வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் பாபா படம் தான் என்று கூறுகிறார்கள்.இன்னொருவர் ஜெயிலர் படத்தில் ஏதேனும் ஒரு குறை இருந்தால் பரவாயில்லை. படம் முழுக்க குறையாகவே இருக்கிறது. முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி மொக்கை. காமெடி பெரிதாக செட் ஆகவில்லை என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

Advertisement