தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார்.
தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார். இவர் 3 ,வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலை பாடியிருக்கிறார். தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார்.
இப்படி ஒரு நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை லைக்ஸ் செய்து வருகின்றனர். சமீபத்தில் கோலி சோடாவுடன் தனுஷ் பதிவிட்ட புகைப்படம் அதிக அளவில் லைக்ஸ்களை குவித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.