எனக்கு தினமும் ஒரு காதல் கடிதம் வந்தது ! வாணி போஜன் கலகல பேட்டி !

0
2962
- Advertisement -

எனக்கு அவங்க போடுற காஸ்டியூம்ஸ்னா ரொம்ப பிடிக்கும், இப்படி இரவு 8 மணிக்கு சன் டிவியின் தெய்வமகள் சீரியல் பார்க்கும் பல பெண்களின் முதல் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு சீரியல்களின் அடக்கமான அம்சமான நாயகி வாணி போஜன்
vaani bhojanநீங்க ஏர்லைன்ல வேலை பார்த்தீங்களாமே? உண்மையா?“ரெண்டு சீரியல், விளம்பர மாடல் லைஃப் செம ஜாலி. ஹீரோயின்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு. எனக்கு கிடைச்சிருக்கு. தினம் தினம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் ஒரு கேரக்டரா போயிட்டு வரேன். நான் ஊட்டிப் பொண்ணு. படிச்சது இங்லீஷ் இலக்கியம்.ஆமா ஏர்லைன் ஜாப் டிரெயினிங், வேலைனு என் லைஃப் போயிட்டு இருந்துச்சு. திடீர்னு அங்க இருந்த ஃப்ரண்ட் தான் ஏன் மாடல் ஆகல நீங்கன்னு கேட்டாங்க அடடே ஆனா என்ன தப்புன்னு தோணுச்சு. அப்படிதான் இப்போ தெய்வமகள், அடுத்து லட்சுமி வந்தாச்சு ரெண்டு சீரியல், விளம்பரங்கள்னு செம பிசியா மாறிட்டேன்!”

-விளம்பரம்-

அப்பா , அம்மா, குடும்பம் பற்றி!

- Advertisement -

“ அப்பா ஒயில்ட் லைஃ போட்டோகிராபர். கூடவே மாடல் போட்டோகிராபரும் கூட, என்ன பார்க்கறீங்க அவருக்கு ஆஸ்தான மாடல் நான் தான். அம்மா ஹவுஸ் ஒயிஃப். அண்ணா ஜர்னலிஸ்ட். உங்க ஃபீல்ட் தான்!” உங்க காஸ்டியூம்க்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கே! “ என் காஸ்ட்யூம் பத்தி என் கிட்ட கேக்காத ஆளில்லை , சீரியல் பொருத்த வரைக்கும் என்னோட டிசைனிங் , சாய்ஸ் தான் காஸ்டியூம். நானே இந்த கலர்ஃபுல் வேலைபாடுகளோட ப்ளவுஸ், இன்னும் சொன்னா நல்லா நோட் பண்ணிப் பாருங்க எல்லாமே கொஞ்சம் ரிட்ரோ ஸ்டைல். பழைய ஃபேஷன லைட்டா டிசைன் பண்ணினது தான். பழசுக்கு எப்பவுமே ஒரு மவுசு உண்டே!”

அப்போ ஆண்கள விட பெண் ரசிகைகள் உங்களுக்கு அதிகம்?

-விளம்பரம்-

சீரியஸா சொல்லணும்னா, ஒரு பொண்ணு திடீர்னு என் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்த்தீங்களா உங்க பேர நான் டாட்டூவா குத்தியிருக்கேன்னு சொன்னா, எனக்கு ஒரு பக்கம் வருத்தமா கூட இருந்துச்சு ச்ச.. நம்ம நடிக்கறோம் அதுக்கு பணம் வாங்கிட்டு போறோம். ஆனால் நம்மள இப்படி கூட ரசிப்பாங்களான்னு ஷாக்கா இருந்துச்சு!”.
vaani bojanசீரியல் நாயகி, அடுத்து சினிமா எண்ட்ரீ எப்போ?“ அந்த சோகக் கதைய ஏன் கேக்கறீங்க, மூடர்கூடம் படத்துல ஹீரோயினா நடிக்க என் கிட்டதான் கேட்டாங்க. அப்போ ரெண்டு மூணு சீரியல், மேலும் எனக்கு அப்போ சினிமா எண்ட்ரியில அவ்ளோ இண்ட்ரெஸ்ட் இல்ல. கடைசியில ஓவியா நாயகியா நடிச்சாங்க. பார்த்தா எங்க திரும்பினாலும் மூடர்கூடம், செம ஹிட். அவார்டு நாமினேஷன் , அடக்கடவுளே எப்படி ஒரு சான்ஸ மிஸ் பண்ணிட்டோம்னு தோணுச்சு. இனிமே அந்தத் தப்ப பண்ணவே கூடாது. ஆனாலும் சரியான வாய்ப்புக்காக காத்திருக்கேன்!”

பிடிச்ச ஹீரோ , ஹீரோயின்!

“ எப்பவுமே தனுஷ் தான். ஹ்ருத்திக், ஷாருக் இவங்கல்லாம் ட்ரீம் பாய் லுக், ஆனால் தனுஷ் தான் பக்கத்து வீட்டு பையன் ஸ்டைல், டேலன்ட், ஏன் பாலிவுட் ஹீரோக்களுக்கே டஃப் குடுத்த நம்மூர் பையன் எனக்கு தனுஷ்னா அவ்ளோ இஷ்டம். ஹீரோயின் ‘மரியான்’ பார்வதி. அவங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். கர்லி ஹேர், செம கெத்துப் பொண்ணு மை ஃபேவரிட்!”

ஒரு டிவி நாயகியா நீங்க டிவி சேனல்கள நினைச்சு வருத்தப்படற விஷயம் என்ன?

” வட இந்திய சீரியல்கள். அந்த ஸ்லாட்டுக்கு நம்மூரு இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்புக் குடுத்தா நம்ம மண்ணுக்கு நெருக்கமான சீரியல்கள் அதிகம் வரும்.அவங்களோட ஸ்பெஷல் மேக்கப் தான். அத நாமளே அழகா கொண்டு வரலாம். அதோட புரடெக்‌ஷன் காஸ்ட். இது ரெண்டையும் சரி பண்ணா நம்ம ஊரு சீரியல்களை மக்கள் அதிகம் ரசிப்பாங்க. இப்படியே போனா நம்மூரு நாடகக் கலைஞர்கள் லைஃப் கேள்விக்குறியாகிடும்.அத யோசிக்கலாம்!”

உங்க ஃபேவரிட் விஜே யாரு!”

“ விஜேக்கள்னு சொல்லுங்க, நான் SS மியூஸிக் சேனலுக்கு பரம ரசிகை. அந்தச் சேனல்ல இருந்த எல்லா விஜேக்களும் என்னோட ஃபேவரிட், பூஜா, ஸ்ரேயா ரெட்டி, பலோமா, லேகா, சான்ஸே இருக்காது. நான் டிவி பார்க்கறேன்னா அது SS மியூஸிக் தான். அந்தச் சேனல்ல ரொம்ப மிஸ் பண்றேன். எங்கப்பா போனாங்க அவங்க!”

உங்க ஃப்ரீ டைம்!

“ புக்ஸ், கொஞ்சமா படிப்பேன். நல்லா தூங்குவேன். ஆனால் எப்பவுமே எங்க வீடு தான். என் ஃப்ரீ டைம். வேலன்டைன்ஸ் டேவ ஊரே ரொமாண்டிக்கா கொண்டாடினா. நான் எங்க மம்மி டேடி, அண்ணா, அண்ணி அவங்களோட பொண்ணுனு கேக் வெட்டி செலிபிரேட் பண்ணேன். அப்படி ஒரு ஹோம் சிக் நான்!”
vani bhojanவாணியோட ஸ்பெஷல்!” என் பேச்சு தான். எனக்கு ஒருத்தர பிடிச்சா போதும், பேசிக்கிட்டே இருப்பேன்,. செம வாயாடி நான். நான் இருக்க செட்ல கூட கல்லாங்கா, பாண்டியாட்டம்னு ஆடி ஒரு தடவ செம கலாய். நான் தான் வின் பண்ணேன். கொஞ்சம் குறும்பு அதிகம்!”

உங்க பலம்! பலவீனம்!

“ தைரியம், ஃப்ரீடம். இந்த தைரியம் மீடியா, வேலைன்னு வரும் போது பலமா இருக்கு, ஆனா பெர்சனலா சிலர் மத்தியில என்னோட தைரியம் கொஞ்சம் திமிரா பார்க்கற மாதிரி இருக்கு அது பலவீனம்!”

க்யூட் லவ் புரபோஸல்!

“நான் படிச்சது போர்டிங் ஸ்கூல், கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் , துரதிர்ஷ்டவசமா எனக்கு அந்த வாய்ப்பே அமையல. ஆனால் கலேஜ்ல தினமும் ஒரு லெட்டர் வரும், ஆனால் பெரிசா ஈர்ப்பு இல்ல!”

பசங்க பத்தி உங்க கருத்து!

“என் சொந்த ஊரு ஊட்டி. அங்க எல்லா பசங்களும் ரொம்பக் கலரா, வெள்ளையா இருப்பாங்க. எனக்கு நல்ல கருப்பா, மேன்லியா, அதுலயும் லோக்கல் சென்னை பாஷை பேசிகிட்டு இருக்க நம்ம தமிழ் மண்ணுக்குச் சொந்தமான பசங்கன்னா ரொம்பப் பிடிக்கும். அதுலயும் அசால்ட்டா, காலர தூக்கி விட்டுட்டு அட்ராசிட்டி பண்ணா நிச்சயம் வாணியோட ஃப்ரண்ட்ஷிப் கிடைக்கும்!”

Advertisement