தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் படங்கள் என்றாலே மற்ற நடிகர்களை விடு சற்று வித்தியாசபடும். படங்களுக்காக மெனக்கெடும் கமல் தனது படத்தின் தலைப்பிற்காகவும் மிகவும் மெனக்கெடுப்பார்.

Advertisement

கமல் படங்கள் என்றாலே அதற்கு சர்ச்சை என்பது குறைவே இருக்காது. அதிலும் ஒரு சில படங்களின் தலைப்பிற்கு கூட பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. உதாரணமாக “விருமாண்டி” படத்தை சொல்லலாம். அந்த படத்திற்கு முதலில் “சண்டியர்” என்று தான் பெயர் வைத்தனர் பின்னர் அந்த தலைப்பிற்கு எதிர்ப்புகள் வர அந்த தலைப்பை விருமாண்டி என்று மாற்றிவிட்டனர்.

அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான “தேவர் மகன்” படத்தின் தலைப்பிற்கு பெரும் சர்ச்சைகள் கிளப்பியது. அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்டு பெயர் வைத்திருப்பதால் கமல் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது என்ற ஒரு சர்ச்சையும் உள்ளது.

Advertisement

Advertisement

கமல் படத்தில் முக்கியமான படம் என்று எடுத்துக்க கொண்டால் அதில் “தேவர் மகன்” படம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.கமல் மற்றும் சிவாஜி இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோக வெற்றியடைந்தது. ஆனால் முதன் முதலில் இந்த படத்திற்கு நம்வார் என்று தலைப்பை வைக்கலாம் என்று தான் கமல் முடிவு செய்துள்ளார்.

ஆனால், “நம்மவர்” என்ற தலைப்பு வேண்டாம் இந்த படத்திற்கு “தேவர் மகன்” என்று பெயர் வையுங்கள் என்று அந்த படத்தின் இசையமைப்பாளராக இருந்த இளையராஜா கூறியுள்ளார். அதன் பின்னர் தான் “தேவர் மகன்” என்ற பெயரை வைத்தார் கமல். இருப்பினும் இந்த படத்திற்காக கமல் யோசித்து வாய்த்த “நம்மவர்” என்ற தலைப்பை வேறொரு படத்தில் வைத்திருந்தார் கமல்.

Advertisement