விஜய் டீவியை அசிங்கப்படுத்திய திவ்யதர்ஷினி! அப்படி என்னதான் சொன்னார்?

0
2778

சிவகாரத்திகேயனின் வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வெகு விமர்சையாக நடந்தது. ஜெயம் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் சிவா கார்திகேயனுக்கு ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லனாக மலையாள நடிகர் பகாத் பாஸில் நடித்துள்ளார்.
டிசம்பர் மாத இறுதியில் வெளிவரவுள்ள இந்த படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட் நடித்திருந்த நிலையில் பாடல் வெளியீடு நேற்று நடந்தது. இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை (DD) தொகுத்து வழங்கினார்.

கலகலப்பாக தொகுத்து வழங்கிய இவர் நிகழ்ச்சியை நன்றாகவும் முடித்து வைத்தார். மேலும், கிடைத்த கேப்பில் தான் தொகுப்பளினியாக பணிபுரிந்த விஜய் டீவியையும் கலாய்த்து விட்டார் DD.

நிகழ்ச்சியின் முடிவில், போட்டோக்கள் எடுக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீடியா போட்டோகிராபர்களை போட்டோ எடுக்க சொல்லி கூறி வந்தார். அவர்கள் தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, ‘இவர்கள் விட்டால் விஜய் டிவி போல காலை 4 மணி வரை போட்டோ எடுப்பார்கள்’ என கிடைத்த கேப்பில் விஜய் டீவியை கலாய்த்து விட்டார் திவ்ய தர்ஷினி