கில்லி படத்தில் ‘கபடி நடுவர்’ தூள் படத்தில் TTR-ஆக நடித்த நடிகர் காலமானார் – காரணம் இது தான்.

0
1173
ruban
- Advertisement -

தமிழில் தரணி இயக்கத்தில் வெளியான ‘தூள்’ மற்றும் ‘கில்லி’ படத்தில் நடித்த பிரபல நடிகர் ரூபன் காலமாகியுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் கதை ஆசிரியராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றியவர் நடிகர் மற்றும் கதை ஆசிரியரான ரூபன். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் கபடி போட்டியின் நடுவராகவும். விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் டிடிஆராக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தூள் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினாலும் அந்த காட்சியில் தோன்றிய இவரை யாராலும் மறக்க முடியாது. இவர் நடிகராக மட்டும் இல்லாமல் சினிமாவில் பல ஆண்டுகளாக கதை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். இரண்டு முகம் போன்ற படங்களில் கதை ஆசிரியராக பணியாற்றிய ரூபன் பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு திரைக்கதை அமைத்த எழுத்தாளர் குழுவில் பணியாற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் பலருக்கு முன்னர் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடரான அண்ணாமலை சீரியலில் கூட நடித்திருக்கிறார் ரூபன்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் ரூபன் காலமாகி இருக்கிறார். 54 வயதாகும் ரூபனுக்கு சங்கீதா என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதியருக்கு குழந்தையும் கிடையாது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ரூபனுக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் இருந்தரூபனுக்கு கொரோனா ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமானது.

இப்படி ஒரு நிலையில் நேற்று செப்டம்பர் 22 திங்கள்கிழமை காலை நான்கு மணி அளவில் ரூபனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதும் ரூபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரூபனுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடலை மருத்துவ குழுவினர் ஓயாமரி மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். ரூபன் மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement