சினிமா திரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் தனெக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். விக்ரம் தனது கடின உழைப்பு மூலம் பல ஆண்டு காலமாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விக்ரம் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார். இதனை தொடர்ந்து விக்ரம் அவர்கள் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாக சினிமா உலகில் தங்களுடைய வாரிசுகளை நடிக்க வைப்பது வழக்கம். அந்த வகையில் விக்ரமின் மகன் துருவ் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக். இந்த படத்தில் பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் உண்மைக் காதல் உணர்வுகளையும், வலிகளையும் அழகாக எடுத்துச் காதல் கதை. மேலும், இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
விக்ரம்-துருவ் விக்ரம் சேர்ந்து நடிக்கும் படம்:
இதனை தொடர்ந்து துருவ் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் மகான். இந்த படத்தில் விக்ரமும் நடித்து இருக்கிறார். இது அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக இணைந்து நடிக்கும் படம். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது.
மகான் படம் பற்றிய தகவல்:
அதுமட்டுமில்லாமல் இந்த படம் மூன்று மொழிகளில் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் அனைத்தும் வெளியாகிவிட்டது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனமும் வந்துகொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படக்குழுவினர் பேட்டி அளித்திருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம் அளித்த பேட்டி:
மகான் படத்தை விளம்பரப்படுத்த பேட்டியில் கலந்துகொண்ட துருவ் விக்ரம் தன்னுடைய அடுத்த படத்தை குறித்த தகவலை கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது, சின்ன வயதிலிருந்தே விஜய் சாருடைய மகன் சஞ்சய் எனக்கு நல்ல நண்பர். அவன் நல்ல கதையுடன் வந்தால் அவர் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். பாலிவுட் மாதிரி இங்கு இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது அமையும் என்று கூறியிருக்கிறார். இப்படி துருவ் விக்ரம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் மகன் சஞ்சய் பற்றிய தகவல்:
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஜய் மகன் சஞ்சீய் இயக்குனராக போகிறாரா? அதுவும் முதல் படத்தில் துருவ் விக்ரமை வைத்து இயக்குகிறாரா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். இதற்கு விஜய் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் இளைய தளபதியாக விஜய் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய மகன் சஞ்சய்க்கு சிறு வயதிலேயே சினிமா மீது அதிகம் ஆர்வம் உடையவர். சஞ்சய்க்கு படம் இயக்குவதில் ஆர்வம் உள்ளதால் அதன் சம்பந்தமான படிப்பை லண்டனில் படித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.