விக்ரம் துருவநட்சத்திரம் படப்பிடிப்பின் முக்கிய தகவல் வெளியானது..!

0
811
Thuruvanatchathiram
- Advertisement -

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சாமி-2’ படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல் தயாரப்பில் ‘கடாரம் கொண்டான் ‘ படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணம் விக்ரம் அந்த படத்தில் வைத்துள்ள கேட்டப் தான்.

- Advertisement -

இந்த படத்தின் படடப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து கொண்டிருக்க நடிகர் விக்ரமின் துருவநட்சத்திரம் நெடு நாளாக கெடப்பில் போடபட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘துருவநட்சத்திரம்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.

இன்னும் 8 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளது. தற்போது விக்ரம், கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். அதனால் துருவ நட்சத்திரம் படம் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.தற்போது கிடைத்த தகவலின்படி கடாரம்கொண்டான் படப்பிடிப்பை ஜனவரி மாதம் முடித்து விட்டு, பின்னர் பிப்ரவரி மாதம் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட உள்ளார் விக்ரம். மேலும், பிப்ரவரி மாதமே துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிடும்.

-விளம்பரம்-

Advertisement