இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “திரௌபதி”. இந்த படம் தமிழ் திரை உலகில் கூட்டு தயாரிப்பு முறையில் உருவாகிய படம் ஆகும். இந்த படத்தில் கதாநாயகனாக அஜித் மச்சான், ஷாலினியின் சகோதரன் ரிச்சர்ட் ரிஷி நடித்து உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக டூலட் படத்தில் நடித்த சுசீலா நடிக்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்த கதாநாயகி தான் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் தான் இசையமைக்கிறார். இவர்களுடன் கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள்.
https://twitter.com/mohandreamer/status/1216695976770953217
இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது எனவும் கூறுகிறார்கள். இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் நாடக காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இது தான் இருந்தது. அது மட்டும் இல்லாமல் பலரும் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள்.
இதையும் பாருங்க : ஆரம்பத்தில் ரஜினி பீடி தான் பிடித்தார். ரகசியம் சொன்ன ரஜினி பட இயக்குனர்.
இந்த படத்தின் டிரெய்லரில் ஜாதி ஆவணக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்று உள்ளது என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை கூறி பல பிரச்சனைகளை செய்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த படத்தின் ட்ரெய்லர் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் சுமார் 4 மில்லியன் வியூஸ் மேல் கடந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று பல பேர் இந்த படத்தின் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/mohandreamer/status/1215848127975944193
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை பார்த்து விட்டு டுவிட்டரில் தல அஜித் அவர்கள் இயக்குனரை அழைத்து பாராட்டினார் என்றும், தனது மச்சானுக்காக தனது ஆதரவையும் தருவதாக சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு இந்த படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் கூறியது, இது எல்லாம் வதந்தி. இதை நம்பாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம். சினிமா உலகமும், அஜித் ரசிகர்களும் குழம்பி விடக் கூடாது என்பதற்காக தான் ட்விட்டரில் இதை பதிவிட்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.





