தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை கொண்டவர். இவருடைய திரைப்படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றி அடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் வந்த சின்னத்தம்பி, மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி போன்று பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களையும் இயக்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் பி.வாசு அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார்.

அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார். அப்போது தொகுப்பாளர் ஒருவர் பி.வாசுவிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் புகைப்பிடிப்பதை எப்படி நிறுத்தினார்? அதைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டு இருந்தார். அதற்கு பி.வாசு அவர்கள் கூறியது, ரஜினி புகைபிடிக்கும் ஸ்டைலே வேற. ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நிறைய புகை பிடிப்பார். அதுமட்டுமில்லாமல் அவர் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளார் என்பதை அவர் புகை பிடிக்கும் போது கண்டுபிடித்து விடலாம். அந்தளவிற்கு ரஜினி நிறைய புகை பிடிப்பார். முதலில் அவர் பீடி தான் பிடித்திருந்தார். அதன் பின்னர் இவர் பைப் மூலம் பிடிக்க ஆரம்பித்தார். அதற்கு நான் ஏன் இதன் மூலம் புகை பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் இந்த பைப் மூலம் பிடித்தால் புகை கம்மியாக தான் இருக்கும் என்று கூறினார். நான் எப்படி பிடித்தாலும் புகை புகை தானே என்று கூறினேன். பின் யார் சொல்லியும் அவர் புகைபிடிப்பதை நிறுத்த வில்லை.
"திருடனே நினைத்தால் தான் திருட்டுத் தொழிலை ஒழிக்க முடியும்" என்ற பழமொழிக்கேற்ப மனிதன் வைத்திருக்கும் கெட்ட பழக்கத்தை அவன் நினைத்தால் மட்டும் தான் அழிக்க முடியுமே தவிர பிறர் அறிவுரை கூறுவதாலோ, பிறர் கண்டிப்புடன் கூறுவது மூலமோ நிறுத்த முடியாது. அதே போல் தான் ரஜினிகாந்த் அவர்களும் அவரே நினைத்து தான் இந்தப் பழக்கத்தை நிறுத்தினார். ஏனென்றால் இந்த மாதிரி தீய பழக்கங்கள் இருப்பது அவர்களுக்கே தெரியும். ஒரு கட்டத்திற்கு மேல் இது நம் உடலுக்கு தீங்கு, நம் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்களுக்கு புரியும். அதோடு நம்முடைய உடல் அதை புரிய வைக்கும். அதே போல் தான் ரஜினிகாந்த் அவரின் உடல்நிலையை புரிந்து கொண்டு நிறுத்தினார்.

சமீபத்தில் அவர் உடல் நலம் பிரச்சனையால் இந்த பழக்கத்தை நிறுத்தியது இல்ல. அதுக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமாக புகை பிடிப்பதை குறைத்துக் கொண்டு நிறுத்தினார். இது நான் சொல்லியோ, பிறர் சொல்லும் அறிவுரை மூலமாக நிற்கவில்லை. அவர் மனதில் தோன்றி அவரே நிறுத்தியது என்று கூறினார். தற்போது இயக்குனர் பி.வாசு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இந்நிலையில்
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இவர் ஏற்கெனவே கன்னடத்தில் ஆப்த ரட்சகா என்ற பெயரில் இயக்கி இருந்தார். அந்தப் படம் அங்கு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. மேலும், இந்த படத்தின் கதையை இன்னும் மெருகேற்றி தமிழில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்க உள்ளார். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.





