கோடி கணக்கில் சொத்தை வாங்கிய அனுஷ்கா. மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான்.

0
8947

தென்னிந்திய சினிமா உலகில் பத்து வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் அம்மணி பிச்சி உதறுவார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.

அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் மூலம் இவருக்கு மார்க்கெட்டே குறைந்து விட்டது. இவர் இந்த படத்திற்காக உடல் எடையை கூட்டுகிறேன் என்று பயங்கர குண்டானார். பின் படம் வெளியானதற்கு பிறகு பல ஆண்டுகள் ஆகியும் நடிகை அனுஷ்கா அவர்களால் பழைய உடல் எடைக்கு கொண்டு வரமுடிய வில்லை. பின் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று உடல் எடையை குறைத்தார். இடையில் இவர் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க பல சிகிச்சை எடுத்துக் கொண்டது காரணம்.

- Advertisement -

கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் அனுஷ்கா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். உடல் எடையை குறைத்த காரணத்தினால் இவருடைய உடல் மேனியின் பளபளப்பு போய் விட்டது. இதனால் நடிகை அனுஷ்கா அவர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக படவாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் நடிகை அனுஷ்கா அவர்கள் கேப்பார் பேச்சைக் கேட்டு சில கோடிகளை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் முக்கியமான இடத்தில் நான்கு பேர் கொண்ட ஒரு வீட்டை அனுஷ்கா வாங்கி இருந்தார். தெலுங்கானாவில் ஏற்பட்ட சொத்து மதிப்பு பிரச்சனையால் நடிகை அனுஷ்கா அவர்கள் அந்த வீட்டை அவசர அவசரமாக 5 கோடிக்கு விற்று விட்டார்.

ஆனால், இவர் அந்த வீட்டை 11 கோடியே 50 லட்சத்திற்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கிட்டத்தட்ட நடிகை அனுஷ்காவுக்கு 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது. இந்த இழப்பை மீட்பதற்காக நடிகை அனுஷ்கா அவர்கள் மீண்டும் அவசர அவசரமாக விசாகப்பட்டினத்தில் நிலம் வாங்கி இருந்தார். இதனை தொடர்ந்து அமராவதியை தலைநகரமாக முயற்சி செய்து வரும் நிலையில் இனி விசாகப்பட்டினத்தில் நிலம் விலை உயராது என நினைத்துக்கொண்டு அதையும் பாதி விலைக்கு விற்று விட்டார். இப்படி நடிகை அனுஷ்கா அவர்கள் நிலத்தின் மீது பணத்தை போட்டு அடி மேல் அடி வாங்கி நொந்து போய் உள்ளார். தற்போது அனுஷ்கா அவர்கள் பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ட் என்ற படத்திலும், நிசப்தம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்

-விளம்பரம்-
Advertisement