சென்னையில் படம் பார்க்க வந்த Blue Sattai மீது ரசிகர்கள் தாக்குதல் ? என்ன ஆச்சி ?

0
593
bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி இருந்தது. ஹீரோ மாறன் படத்தில் பாட்சா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறப்பவர் தான் பாட்சா. பின்னர் இவரது உடலை வைத்து நடக்கும் அரசியல் வேலைகளே இந்த படத்தின் கதை.

இந்த திரைப்படத்திற்கு சுமாரான விமர்சனமே வந்து கொண்டு இருந்தார் நிலையில் இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் இந்த படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இந்த படம் பட்ஜெட்டை விட லாபத்தை பெற்று இருந்தது. ஆன்டி இந்தியன் படத்திற்கு பின்னர் ப்ளூ சட்டை மாறன் பிற படங்களை விமர்சிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் தன் விமர்சன பணியை தொடர்ந்து செய்து வருகிறார் மாறன்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படத்தின் விமர்சனத்தால் இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படம் தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார். டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தை உருவ கேலி செய்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் இவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் சென்னையில் உள்ள PVR தியேட்டரில் படம் பார்க்க சென்ற போது மர்ம நபர்கள் சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாக நடிகரும் அகில உலக ஆன்மீக இந்துமத கட்சியின் தலைவருமான Jsk கோபி பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே இவருக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் ட்விட்டரில் பனிப்போர் நிலவிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement