தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
பெரிய நடிகர்களின் ரெபரென்ஸ் :
இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்கள் உச்சத்திலிருக்கும் நடிகர்களை குறித்து தங்களுடைய படங்களில் பெருமை பேசுவதும், நடிப்பதும் போன்ற காட்சிகளில் நடித்து வருவார்கள்.
விஜய்யை விமர்சித்தாரா ஆதி ? :
ஆனால், ஹிப்ஹாப் ஆதி தன்னுடைய படத்தில் விஜய்யை விமர்சனம் செய்யும் வகையில் நடித்து உள்ளார். இதற்கு தற்போது விஜய் ரசிகர்கள் பயங்கர கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகராக ஹிப்ஹாப் ஆதி திகழ்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
சந்திரசேகரன் பையன்டா :
அந்த வகையில் சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த படம் சிவகுமாரின் சபதம். இந்த படத்தை இவரே இயக்கி, இசையமைத்து, தயாரித்தும் உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு நபர் நான் சந்திரசேகரன் பையன்டா! என்று சொல்வார்.
கொந்தளித்த விஜய் ரசிகர்கள் :
அதை கிண்டலடிக்கும் வகையில் ஹிப்ஹாப் ஆதி பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த காட்சி விஜய்யை கிண்டல் கேலி செய்யும் விதமாக தான் உள்ளது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்து போய் ஹிப்ஹாப் ஆதியை விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். அதோடு சும்மாவே விஜய் ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு வறுத்து எடுப்பார்கள்.
இதற்கு சொல்லவே வேண்டாம், ஹிப்ஹாப் ஆதியை விஜய் ரசிகர்கள் தாலித்து வருகிறார்கள். இப்படி ஏன் ஹிப்ஹாப் ஆதி செய்தார் என்றும் பலரும் கேட்டு வருகிறார்கள். இதற்கு ஹிப்ஹாப் ஆதி தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இது ஒருபுறம் இருக்க ஹிப் ஆதி நடித்துள்ள அன்பறிவு திரைப்படம் விரைவில் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.