தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற “இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம்.

Advertisement

இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கோடகுவின் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள நடிகைகளின் வீட்டில் ஐ.டி துறையைச் சேர்ந்த சுமார் 10 அதிகாரிகள் தேடுதல் நடத்தினர். ஆனால்,அப்போது ரஷ்மிகாவின் தந்தையார் மட்டும் தான் இருந்துள்ளார். காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை அடுத்த நாள் வரை தொடர்ந்துள்ளது. இந்த சோதனையின் போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும், நடிகை ரூ .1.5 கோடிக்கு வரி செலுத்தவில்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் பரவி வருகிறது. மேலும், ராஷ்மிகாவிற்கு இரண்டு பான் கணக்குகள் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. மேலும், கடந்த திங்களன்று (ஜனவரி 22) மைசூருவில் உள்ள ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு ரஷ்மிகா மற்றும் அவரது அப்பா மதன் மந்தன்னாவருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளார்கள் . அவர்களின் உத்தரவுப்படி, ரஷ்மிகா மற்றும் மந்தன்னா ஆகியோர் ஐ.டி அலுவலகத்திற்கு சென்று தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கி உள்ளார்கள்.

Advertisement

Advertisement

அதன் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ராஷ்மிகாவின் தந்தை மதன், “ஐ-டி அதிகாரிகள் சில ஆவணங்களை நாடியுள்ளனர், அவற்றை சமர்ப்பிக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்”என்று கூறி இருந்தார். ரஷ்மிகாவுடன் கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் உட்பட ஒன்பது பேர் இருந்தனர். சுமார் 29 மணி நேரம் இந்த சோதனை நடந்தது, அதிகாரிகள் ஒரு சூட்கேஸ், மூன்று கைப்பைகள் மற்றும் ஒரு பெட்டி ஆவணங்களுடன் வெளியேறினர் என்று பிரபல பத்திரிகையில் செய்தியும் வெளியிபட்டுள்ளது. அதே போல ரூ .25 லட்சம் கணக்கிடப்படாத ரொக்கம், ஆவணங்கள் மற்றும் ரூ .3.94 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஐ.டி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் தகவல்களை வெளியிட்ட பின்னரே இந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும்.

Advertisement