கவின் மற்றும் லாஸ்லியாவை அழைத்து விருந்து கொடுத்தாரா கமல் ?இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

0
5778

விஜய் தொலைக்காட்சி யில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீசனை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். தமிழில் ஒளிபரப்பாகுவது போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 சீசன்களை தொகுத்து வழங்கி வரும் ஒரே நடிகர் கமல்ஹாசன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் பிக்பாஸ் மேடை மூலமாகத்தான் கமலஹாசன் தனது அரசியல் பயணத்தை கூட அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது சினிமா வாழ்விற்கும் அரசியல் வாழ்விற்கு மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும், சர்ச்சையான நிகழ்வுகளும் நடந்தேறியது. அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இந்த சீசன் முழுவதும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் தான் அதிகம் ஓடிவந்தது. அதேபோல சரவணனின் வெளியேற்றம், மதுமிதாவின் சர்ச்சையான வெளியேற்றம் போன்றவைகள் இந்த சீசனில் அதிகம் சர்ச்சையான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வரும் தீபாவளி பண்டிகை அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

- Advertisement -

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தால் போட்டியாளர்களை கமல் சந்தித்து விருந்து கொடுப்பது ஒரு இயல்பான விஷயம் தான். அந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த கையோடு கமல் போட்டியாளர்களுடன் பங்கேற்று விருந்தில் கலந்து கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த சீசனில் பங்கேற்ற அபிராமி, சாண்டி, கவின், லாஸ்லியா ஆகியோரை கமல் சந்தித்து விருந்து கொடுத்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. இதோடு மட்டுமல்லாமல் கமல், கவின், சாண்டி, லாஸ்லியா அபிராமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுவது போல ஒரு புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. இதனால் கமல் ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு இவர்களுக்கு மட்டும் விருந்தளித்து உள்ளார் என்று விமர்சனங்களும் இருந்து வந்தது.

Kavin-losliya

ஆனால், பின்னர்தான் தெரிந்தது இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், கமல் இதுபோல எந்த ஒரு விருதினையும் அளிக்கவில்லை என்றும் தெரியவந்தது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது போட்டியாளர்களை அழைத்து விருந்து கொடுப்பது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால், தற்போது கமல், இந்தியன் 2 படத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார் அதனால் இந்த புகைப்படம் போலியான ஒரு புகைப்படம் என்பது உறுதியாகி உள்ளது அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து லாஸ்லியா தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றுள்ளார் அந்த புகைப்படமும் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது எனவே, லாஸ்லியா கமலுடன் விருந்தில் பங்கேற்று உள்ள இந்தப் புகைப்படம் முற்றிலும் போலியான புகைப்படம் தான் என்பது உறுதியாகியுள்ளது

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து பல்வேறு போட்டியாளர்களும் பேட்டிகளில் பங்கேற்று வந்துள்ளனர் ஆனால், இந்த சீசனில் பங்கேற்ற கவின், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவர் மட்டும் இன்னமும் எந்த பேட்டியிலும் பங்கு பெறவில்லை. இதில் சாண்டி கூட விட்டு விடலாம் ஆனால், இந்த சீசனில் மிகவும் ஹைலைட்டாக பேசப்பட்டு வந்த ஜோடிகளான கவின் மற்றும் லாஸ்யா இருவரும் இதுவரை நேரில் கூட சந்தித்தது இல்லை. அதே போல இவர்கள் இருவரும் இதுவரை எந்த ஒரு பேட்டியிலும் பங்கு பெற்றதில்லை. இதனால் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement