திருமணத்தினால் மதம் மாறினீர்களா ? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த நகஹத் கான். அட, அதாங்க நம்ப குஷ்பு.

0
21125
kushboo
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான் சேரும் .தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு சில ஆண்டுகளாக பல சர்ச்சைகலில் சிக்கியுள்ளார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது குஷ்பூ அவர்கள் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர் தனது த்விட்டேர் பக்கத்தில் மோடி மீதும் ,பா.ஜா.கா மீதும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் .இதனால் பல பா.ஜா.கா பிரமுகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் குஷ்பு.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘நவீன நாட காதல்’ – திரௌபதி படத்தின் முழு விமர்சனம்.

கடந்த ஆண்டு மோடி மீது இவர் தொடந்து வைத்து வந்த குற்றச்சாட்டால் காண்டான பா ஜா க ரசிகர்கள் குஷ்பு மீது எதிர் தாக்குதல் தொடுக்கும் விதமாக குஷ்புவை ஹிந்து இல்லை என்றும் அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றும் அவரது உண்மையான பெயர் நிஷாத்கான் அதனால் தான் அவர் தொடந்து ஹிந்துக்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார் என்று தெரிவித்தனர். மேலும், ட்விட்டரில் நிறைய நெகட்டிவ் கருத்துக்கள் வருவதால் சமீபத்தில் ட்விட்டர் கணக்கை கூட முடிக்கி இருந்தார் குஷ்பு.

-விளம்பரம்-

இருப்பினும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.சமீபத்தில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், எனக்கு ஒரு சந்தேகம் பிரச்சினை இல்லை என்றால் தயவு செய்து பதில் சொல்லுங்கள் நீங்கள் மதம் மாறியதற்கு திருமணம் காரணமா ? இல்லை முந்தைய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதது காரணமா என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பு நான் என்னுடைய மதத்தை மாற்றிக் கொள்ளவில்லை மேலும் நான் எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மதத்தை பொருத்தது அல்ல என்று பதிலளித்துள்ளார்.

Advertisement