தீவிர நோம்பு இருந்து வரும் பிரியா ஆனந்த்.! இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா.!

0
316

தமிழ் திரையுலகில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், இசையமைப்பாளர் யுவன், நடிகர் ஜெய், சிம்புவின் சகோதரர் ,சிலம்பரசன் என்று பலரும் இஸ்லாம் மதத்திற்கு மாறியிவர்கள் தான்.

Related image

அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்தும் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. தமிழில் எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’ போன்ற படங்களில் நடித்தவரான ப்ரியா ஆனந்த், சமீபத்தில் வெளியான எல் கே ஜி படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பிரியா ஆனந்த் ரம்ஜான் நோம்பு இருந்து வருவதால் இவரை பலரும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று கூறிவந்தனர். இதுகுறித்து பேசியுள்ள பிரியா ஆனந்த், அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு  எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன்.

அதேபோல எனக்குப் பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது.இந்த வருடம் ரம்ஜான் நோம்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சிசெய்துவருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்துவருகிறேன் என்று கூறியுள்ளார்.