ரஜினி தர்பார் இசை வெளியிட்டு விழாவில் சொன்ன அவமான கதை – இவர் தான் அந்த தயாரிப்பாளரா ?

0
3385
rajini

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் தர்பார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தர்பார் படம் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஒருவரால் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ரஜினி பேசி உள்ளார்.

இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அவர்கள் பேசியது, ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்க வேண்டும் என்று பாலசந்தர் யோசித்து எனக்கு வைத்தார். இந்த அளவிற்கு நான் இருப்பதற்கு காரணம் அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான்.

- Advertisement -

அவர் நம்பிக்கை வீண் போக வில்லை. சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஒருவர் என்னை அவமானப்பட்டுத்தி படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்காமல் என்னை திட்டி துரத்தி வெளியேற்றினார். அந்த வெறி கோடம்பாக்கம் சாலையில் வெளிநாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு பிறகு நான் இத்தாலி கார் ஒன்றை வாங்கினேன். அதனை வெளிநாட்டு நபரை வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றேன். எந்த தயாரிப்பாளரால் நான் அவமதிக்கப்பட்டேனோ அந்த இடத்தில் எனது காரை நிறுத்தி சிகரெட்டை பற்ற வைத்தேன். நம் வாழ்க்கையில் வெற்றி பெற நேரம், காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ரொம்ப முக்கியம்.

அதற்காக நாம் காத்திருக்கனும், உழைக்க வேண்டும் என்று கூறினார். ரஜினிகாந்த் அவமதிப்பதை தொடர்ந்து அவரை அவமதித்தார் எந்த தயாரிப்பாளர்? என்று சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர். பிறகு ரஜினிகாந்தை அவமதிப்பது உண்மைதான். திரு டி என் பாலு தான் அந்த தயாரிப்பாளர் என்று தெரியவந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளிவந்த சட்டம் என் கையில் என்ற படத்திற்காகத் தான் ரஜினியை நடிக்க அழைத்தார்கள். அந்த படத்தின் போது தான் ரஜினிகாந்தை அவமதிக்கப்பட்டு வெளி ஏறினார். ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தார். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement