Breaking News : மேன் Vs வைல்ட் படப்பிடிப்பின் போது ரஜினிக்கு காயமா? உண்மை என்ன ?

0
2250
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு “தர்பார்” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்து உள்ளார். அதோடு படத்தின் ஒவ்வொரும் பாடலும் சும்மா கிழி தான்.

-விளம்பரம்-

இந்நிலையில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியின் ஷூட்டிங் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு லேசாக காயம் ஏற்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பதட்டத்தில் உள்ளார்கள். பேர் கிரில்ஸ் இயக்கும் நிகழ்ச்சி தான் மேன் வெர்சஸ் வைல்ட். இந்த நிகழ்ச்சி உலக அளவில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். இதற்குப் பின் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியானது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் போது ரஜினிகாந்துக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளதாக =வும் இதனால் படபிடிப்பை ரத்து செய்துவிட்டு ரஜினி மீண்டும் சென்னை திரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திலும், ரஜினிகாந்த் உடல்நலம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஆனால், இது பொய்யான தகவல் என்றும் ரஜினி படப்பிடிப்பை முடித்துவிட்டு நல்லபடியாக சென்னை வந்து சேர்ந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இயக்குனர் சிவாவும், ரஜினிகாந்தும் முதன் முதலாக இந்த படத்தில் தான் இணைகிறார்கள். இந்த படத்திற்கு ‘அண்ணாத்த, மன்னவன், வியோகம்’ போன்ற பல பெயர்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று முடிந்தது. ரஜினிகாந்துக்கு இந்த படத்தில் இரண்டு மனைவிகள். ரஜினியின் முதல் குஷ்பூ, இரண்டாவது மனைவியாக மீனாநடிக்கிறார்கள். மேலும், தலைவர் 168 படம் குறித்துப் பல கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்கிறார். தலைவர் 168 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் தீபாவளிக்கு முன்னதாகவே ஆயுதபூஜை விடுமுறையில் வெளியாகும் என்று செய்திகள் பரவி வருகின்றன.

Advertisement