கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது.

சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 300 தீவிர வாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டது. இதனால் பலரும் இந்திய ராணுவத்தை பாராட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க உண்மையில் 300 தீவிரவாதிகள் கொல்லப்படவில்லை என்றும் இது இந்தியர்களை சமரசப்படுத்து மேற்கொண்ட வெறும் கண் துடைப்பு மட்டும் தான் என்று காரசாரமான ஒரு விவாதமும் போய் கொண்டிருக்கிறது.

Advertisement

இன்று தாக்குதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது எடுக்கபட்ட புகைப்படங்கள், வீடியோ என்று பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் குடி மகன்களோ வெறும் மரத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு இந்தியர்கள் பெருமைகொள்கின்றனர் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

அதற்கேற்றார் போல தாக்குதலில் உயிரிழந்த எந்த ஒரு உடல்களும் தஹ்ரபோது வரை வெளியாகவில்லை. அதே போல ஒரு வேலை தீவிரவாதிகள் கொலைப்டைருந்தாலும் ஏன் இன்னும் தீவிரவாத முகாம்கள் நாட்டில் இருக்கின்றது என்று பதில் சொல்ல வேண்டும். சரி, கொள்ளப்பட்டது தீவிரவாதிகள் இல்லை பொது மக்கள் தான் என்றாலும் அது பாகிஸ்தானுக்கு உள்நாட்டு நெருக்கடியை ஏற்படுத்தும். அதே போல இந்தியா மீது போர் தொடங்கும் நிர்பந்தமும் உண்டாகும். ஆனால், பாகிஸ்தான் அதனை முற்றிலும் விரும்பாது, காரணம் போர் வந்தால் அவர்களது கதி என்ன வாகும் என்பது அவர்கள் உணருவார்கள்.

Advertisement

இத்தனை கேள்விகள் இருக்க, உண்மையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா இல்லை பாகிஸ்தான் மக்கள் சொல்வது போல யாரும் கொல்லப்படவில்லையா என்பது யாருக்கோ வெளிச்சம். இத்தகைய கேள்விக்கெல்லாம் பின்னுட்டமாகா அமைவது என்னவெனில், புல்வாமாவில் ஏற்கனேவே புல்வாமா தாக்குதலில் போது தீவிர வாதிகள் அத்தனை பாதுகாப்பையும் மீறி எவ்வாறு எல்லைக்குள் நுழைந்தனர். உண்மையில் இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலா அல்லது அரசியல் நடத்தப்பட்ட கோரமான நாடகமா போன்ற பல்வேறு சர்ச்சைகளும் ஓடியது, ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை

Advertisement
Advertisement