பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து நடிகர் பிரபு தேவா அவர்கள் “தபாங் 3” என்ற படத்தை இயக்கி உள்ளார். இது நடிகர் பிரபு தேவா இயக்கும் 14வது படம் ஆகும். மேலும், இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டய கிளப்பி உள்ளது. அதோடு தபாங் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நடிகர் சல்மான் கான் அவர்கள் தனது சகோதரர் அர்பாஸ் கான் உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா, கன்னட நடிகர் சுதீப், மஹி ஹில் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் வன்மையான முறையில் தடியடி நடத்தி உள்ளார்கள். இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கொந்தளித்து போராட்டம் செய்ய தொடங்கி விட்டார்கள். குடியுரிமை சட்ட திருத்தம் கண்டித்து பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் கூட போராட்டம் செய்கிறார்கள்.
இதையும் பாருங்க : அரண்மனை கிளி சீரியல் நடிகருடன் கடற்கரையில் டிக் டாக் செய்த நீலிமா ராணி. வைரலாகும் வீடியோ.
இந்நிலையில் “தபாங் 3” படம் வெளியான முதல் நாளிலேயே 30 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால், 22 கோடி மட்டும் தான் வசூலானது. ஏனென்றால் இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருவதால் தான் இந்த படத்தின் முதல் நாள் வசூல் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளி வந்து உள்ளது. மேலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கான் அவர்கள் எதுவும் பேசவில்லை என அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும், ரசிகர்களும் திட்டி வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் நடிகர் சல்மான் கான் அவர்கள் டபாங் 3 படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது இந்து கடவுளான சிவபெருமானை அவமதித்ததாக புதிய சர்ச்சையை கிளப்பி நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக நடிகர் சல்மான் கானும், படக்குழுவினரும் சொன்னால் மட்டும் தான் உண்மை எதுவென்று தெரியும். அதோடு சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் கடவுள் ராமரை அவமதித்ததாக இந்த பிரச்சனை தொடர்ந்து தற்போது சல்மான்கான் சிவலிங்கத்தை அவமதித்தார் என்ற புதிய பிரச்சினையை கிளப்பி உள்ளார்கள்.
குடியுரிமை திருத்த மசோதா தொடர்பாக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை எல்லாம் வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறி இருந்தார். ஆனால், அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் இணையங்களில் பல கருத்துகளை பதிவிட்டு வந்தார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் சல்மான்கானை இந்த பிரச்சனையில் மாட்டி விட்டு உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இது வதந்தியா? எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்து தான் தெரியும்.