சமந்தா ஒன்னும் அழகு இல்ல- விமர்சித்த முகமூடி பட நடிகை. இந்த புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்தாரா சமந்தா ?

0
3510
pooja
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.ஹெக்டே

-விளம்பரம்-

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

- Advertisement -

திலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் ‘ எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார். இதனால் பூஜா மீது சமந்தா ரசிகர்கள் கடும் கடுப்பில் ஆழ்ந்தனர்.

ஆனால், நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டது. அதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார். இந்த பதிவை போட்ட அரை மணி நேரத்தில், தனது இன்ஸ்டகிராம் கணக்கு சரி செய்யபட்டுவிட்டது என்று கூறி அந்தர் பல்டி அடித்துவிட்டார்.

-விளம்பரம்-

இருப்பினும் பூஜா, சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்கள் ட்விட்டரில் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஸ் டேக்கை கூட ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பூஜா ஹெக்டே எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘peace’ என்று குறிப்பிடும் வகையில் இரண்டு விரல்களை காண்பித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவு பூஜா ஹெக்டேவுக்கு கொடுத்த பதிலடி தான் என்று சமந்தாவின் ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், ரசிகர் ஒருவர், எனக்கு என்னமோ பூஜாக்கு நடுவிரல காட்ட கூச்ச பட்டுட்டு இப்டி போஸ் குடுக்குற மாதிரி இருக்கு என்றும் கமன்ட் செய்துள்ளார். மேலும், சமந்தாவின் பல ரசிகர்களும் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

Advertisement