நயத்தரவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் ரகசிய திருமணம் முடிந்ததா ?

0
1204
Nayanthara
- Advertisement -

தமிழ்திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னி என்றால் மிகையாகாது. பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்துவரும் நயன்தாரா சிம்புவை முதலில் காதலித்தார். சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. திடீரென்று இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
Nayanthara
அதன்பின் தான் உண்டு தன்வேலை உண்டு என்றிருந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் நெருக்கமானார்.ஏற்கனவே பிரபுதேவாவிற்கு திருமணமாகியிருந்த நிலையிலும் இவர்களது காதல் தொடர்ந்தது. பின்னர் பிரபுதேவா தனது குடும்பத்தை சட்டரீதியாக பிரிந்து நயன்தாராவை திருமணம் செய்ய தயாரானார்.நயன்தாராவுமே தனது கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்திக்கொண்டார். பிறகு கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

-விளம்பரம்-

இப்படியாக இருக்கையில் தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.இயக்குனரும், தனது காதலருமான விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார்.

- Advertisement -

“நானும் ரவுடிதான்” படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இப்போது விக்னேஷ் சிவன், சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள்.
Vignesh Sivanநேற்று முன்தினம் திடீரென விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றார் நயன்தாரா. நியூயார்க்கில் நேற்று நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்‌னேஷ் சிவன். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: கமல்–சங்கர் கூட்டணியில் இந்தியன் Part-2 !

-விளம்பரம்-

இப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
அமெரிக்காவில் மேலும் 2 நாட்கள் தங்கிவிட்டு அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது.
Nayantharaஇந்நிலையில் அவர்களுக்கு ஏற்கனவே ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதாகவும் அதன் பின்னரே அமெரிக்கா சென்றிருப்பதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement