சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம் ‘ படம் குறித்து பிரபல இயக்குனர் ரஞ்சித் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. சூரரை போற்று என்று வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் போலீஸ் கூட பழங்குடியினர் மக்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான்.

Advertisement

அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்ட பழங்குடியினர் கதை அப்படியே உண்மையாக நடந்த கதை தான். இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அவ்வளவு ஏன் இந்த படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கூட மிகவும் உருவகமான அறிக்கையை வெளியிட்டு படக்குழுவையும் பாராட்டினார். இந்த நிலையில் இந்த படம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ் ராஜ், ஒரு வட்டிகடை சேட்டுவிடம் விசாரித்து கொண்டு இருப்பார். அப்போது அந்த சேட்டு, இந்தியில் பேசுவார். உடனே பிரகாஷ் ராஜ் அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்துவிடுவார். அதற்க்கு அந்த சேட்டு ‘எதுக்கு சார் என்ன அடிசீங்க’ என்று கேட்பார் அதற்கு பிரகாஷ் ராஜ் ‘தமிழ்ல பேசு’ இன்று கூறுகிறார். இந்த படம் தமிழை போல தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது.

Advertisement

தெலுங்கில் இதே காட்சியில் பிரகாஷ் ராஜ் ‘தெலுங்கில் பேசு’ என்று தான் கூறுகிறார். ஆனால், இந்தியில் மட்டும் அந்த சேட்டை அறைந்துவிட்டு ‘இப்போ உண்மைய பேசு ‘ என்று கூறுகிறார் பிரகாஷ் ராஜ். தற்போது இந்த காட்சிகள்தான் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் இந்தியில் பேசினால் அதிகாரிகள் அரைவார்களா ? அப்போது இந்தியிலும் இதே வசனத்தை வைக்காமல் பயந்து ஏன் வேறு வசனத்தை வைத்து இருக்கிறீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement
Advertisement