வாரிசு படத்துக்கு நல்ல Review கொடுக்க இத்தனை கோடி கொடுக்கப்பட்டதா ? – பிரசாந்த் & ப்ளூ சட்டை விமர்சனம்.

0
498
varisu
- Advertisement -

சமீபத்தில் சினிமா விமர்சகர்களான ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் வாரிசு படக்குழுவினர் தந்ததாக தகவல் வந்ததை அடுத்து அதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த். இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே இருக்கும் நிலையில் படத்திற்க்கான ஆவல் ரசிகர்கள் மத்தியில் நிலையில் தொட்டுள்ளது.

-விளம்பரம்-

ஏற்கனவே கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சங்ககளை பெற்ற நிலையில் ஆக்ஷன் திரைக்கதையை தவிர்த்து குடும்ப கதையில் இப்படமானது தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கிறது.வாரிசு படத்தின் உருவாக்கம் அறிவித்த போதிலிருந்தே பல சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் படத்தின் சில காட்சிகள் வெளியானது பின்னர் தெலுங்கு மொழியில் உருவாகும் அப்படத்தை பின்னர் ஆந்திராவில் பிரச்சனை ஏற்பட்டு வெளியாக்கும் தேதி தள்ளிப்போனது.

- Advertisement -

சர்ச்சைகள் :

இதனையடுத்தது விஜய் வாரிசு அரசியலில் இறங்க போகிறார் என்று சர்ச்சையிம் வெளியானது. மேலும் இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் மற்றொரு முன்னணி நடிகரான அஜித்தின் துணிவு படமும் வார்சுடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது.துணிவு படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்தே பலதாவிதமான அப்டேட்டுகளை கொடுத்தும், ப்ரோமோஷன்கள் செய்தும் வருகின்றனர் துணிவு படக்குழுவினர்.

ப்ரோமோஷன் :

ஆனால் வாரிசு படத்தில் இசை வெளியிட்டு விழாவிற்கு வாரிசு எந்த விதமான அப்டேட்டுகளும் வாரிசு படக்குழுவினரிடம் இருந்து வரவில்லை அதோடு ப்ரோமோஷன்களும் நடைபெறவில்லை . இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும். இந்த நிலையில் பிரபல செய்து தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியில் பிரபல சினிமா யூடியூபர்களான ப்ளு சாட்டை மாறன் மற்றும் பிரசாந்த்திற்கு தலா 1 கோடி கொடுத்து வாரிசு படத்திற்கு நல்ல விமர்சனம் சொல்ல வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

பிரசாந்த் ட்விட்டர் பதிவு :

இந்த நிலையில்அந்த செய்தி வெளியான தொலைக்காட்சியை ட்ரோல் செய்யும் வகையில் ப்ளு சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் இருவரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரசாந்த் போட்டுள்ள பதிவில் என்னுடைய உடல் பிறந்தவர்கள் இதனை உண்மை என்று நினைத்து விட்டனர். இதனால் அவர்கள் எனக்கு மரியாதை கொடுப்பதை என்னால் காண முடிகிறது நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ப்ளு சட்டை ட்விட்டர் பதிவு :

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு இணையவாசி போட்டிருந்த ட்விட்டர் பதிவை ரீட்விட் செய்து கலாய்த்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் “வாழ்த்துக்கள் அண்னே ப்ளூ சாட்டை மாறன், தமிழ் டாக்கீஸ் யூடியூப் இது போல பல படத்திற்க்கு ஒரு கோடி என வாங்கி ஒரே வருடத்தில் சாட்டிலைட் செயலாக மாற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். வாரிசு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் நிலையில் இவர்கள் இருவரும் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement