தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் இதை சமீபகாலமாகவே இவரது படங்களில் அரசை எதிர்த்து பல்வேறு வசனங்கள் இருந்ததால் இவரது படங்கள் வெளியாகும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது இந்த பிரச்சனை தற்போது ஆரம்பித்தது கிடையாது தலைவா படத்தின் போதே நடிகர் விஜயின் படங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி விட்டது.
தலைவா படத்திற்கு பின்னர்தான் விஜய்யின் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தது சமீபத்தில் வெளியான திகில் படம் வரை இந்த பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை அதிலும் கத்தி படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது அதிலும் குறிப்பாக கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசிய வசனங்கள் பல்வேறு அரசியலை விமர்சித்த இருந்தது.
அதே போல விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக விஜய் புதிய அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஓர் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக டெல்லி வழக்கறிஞர் ஒருவருடன் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏசி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சி பதிவு குறித்து பேச்சுவார்த்தைக்காக அந்த வழக்கறிஞரை சில தினங்களுக்கு முன் விமானம் மூலம் சென்னைக்கு அடைக்கப்பட்டு, விஜய்யின் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றதாகவும், இந்த ஆலோசனையின் போது விஜய்யின் தந்தை மட்டும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த வழக்கறிஞருடன் தான் நடிகர் ரஜினி தனது அரசியல் கட்சி பதிவுக்காக முதலில் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், பிறகு அதை பாதியில் நிறுத்திவிட்டு வேறு ஒரு வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.