அஜித்தை கேலி செய்யத்தான் அந்த வேஷ்டி கெட்டப்பா – பல வருட ரகசியத்தை உடைத்த சச்சின் பட இயக்குனர்.

0
5313
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த்– கமலஹாசனுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். அதுமட்டும் இல்லாமல் தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் சினிமா உலகில் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். மேலும், இவர்கள் இருவருக்கும் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். இருந்தாலும் அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

-விளம்பரம்-

எப்போதுமே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இடையே சண்டை, சச்சரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. உண்மையிலேயே சொல்லப்போனால் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் தான்.விஜய் மற்றும் அஜித் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இப்போது வரை இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக கடும் போட்டி நிலவி கொண்டு தான் வருகிறது.

- Advertisement -

இவர்களது படங்களில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பல வசனங்களை பேசி உள்ளதையும் நாம் அறிவோம். அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், அஜித்தின் அட்டகாசம் படத்திலும் விஜய்யின் சச்சின் படத்திலும் பாடல்கள் மூலம் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்தனர் என்றும் ரசிகர்கள் நம்பி வருகின்றனர். அந்த வகையில் சச்சின் படத்தில் இடம்பெற்ற ‘குண்டு மாங்கா’ பாடலில் அஜித்தை போல வேஷ்டி சட்டை கட்டிக்கொண்டு விஜய் ஆடினார் என்றும் ரசிகர்கள் நம்பி வந்தார்கள்.

வீடியோவில் 5 :51 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சச்சின் படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன் கூறுகையில், அட்டகாசம் படத்தில் அஜித் வேஷ்டி கெட்டப்பில் இருந்ததால் விஜய் இந்த படத்தில் வேஷ்டி கெட்டப் போட்டார் என்று பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அப்படியில்லை. படம் முழுக்க அவர் ஒரே கெட்டப்பில் இருந்து வந்தார். ஒரு வித்தியாசம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பாட்டில் அவருக்கு இந்த கெட்டப்பை போடப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement