விஜயிடம் நெப்போலியன் பேசத்ததற்கு காரணம் விஜய் சொன்ன இந்த வார்த்தை தான் காரணமா ? வீடியோ இதோ.

0
1637
nepolean

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் நெப்போலியனும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர்.

வீடியோவில் 17 நிமிடத்தில் பார்க்கவும்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் நெப்போலியன் தான் விஜயுடன் பேசுவது இல்ல என்று கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பேட்டியில் பங்கேற்ற நெப்போலியன், போக்கிரி படத்தில் நான் பிரபுதேவாக்காக தான் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று பிரபுதேவா பிடிவாதம் பிடித்தார். அதனால் தான் நான் போக்கிரி படத்தில் நடித்தேன். அந்த படத்தில் விஜய் கூட எனக்கு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

- Advertisement -

நான் இப்போது வரை அவரிடம் பேசுவது இல்லை. மேலும், அவருடைய படங்களை நான் பார்ப்பதில்லை. அதனால் அவருடைய வளர்ச்சியை பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர்களான இது குறித்து ஏற்கனவே பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் பேசியுள்ள அவர்கள், அந்த பிரபலமான நடிகர் படத்தில் நடித்து உள்ளார்.

பிரபலமான நடிகரை பார்ப்பதற்காக நெப்போலியன் நண்பர்கள் கேட்டுள்ளார்கள். நெப்போலியனும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் தான். நானே உங்களை அவரிடம் அறிமுகப்படுத்தி போட்டோ எடுக்க வைக்கிறேன் என்று கூறி அவர்களை நெப்போலியன் அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது அந்த நடிகர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார். பின் அந்த நடிகர் கேரவனில் இருப்பதை அறிந்து கொண்டு நெப்போலியன் தன் நண்பர்கள் உடன் கேரவனுக்கு சென்றார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-19.png

திடீரென்று நடிகர் நெப்போலியன் கேரவன் கதவை திறக்க முயன்றபோது அங்கு வெளியே இருந்த பாதுகாவலர் ஏன் இப்படி செய்கிறீர்கள்? சார் இடம் அனுமதி இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. சார் உங்களை வரச் சொன்னாரா? என்று நெப்போலியன் இடம் பேசியுள்ளார். பிறகு நெப்போலியனுக்கும் அந்த கேரவன் காவலருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. உடனே அந்த நடிகர் கதவைத் திறந்து கொண்டு வந்தார். அவர் தனக்கு தான் ஆதரவாக பேசுவார் என்று நெப்போலியன் நினைத்தார்.

ஆனால், அந்த நடிகர் நெப்போலியனை பார்த்து ‘உங்களுக்கு மேனஸ் தெரியாதா? நீங்க பாட்டு வந்து கதவைத் திறப்பீர்களா? என்று கேட்டுள்ளார். இதனால் நெப்போலியனுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்து அவர் தன் நண்பர்களை கூட்டிட்டு சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். ஆனால், அது விஜய் தான் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement