பிராம்மாண்ட படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா விக்ரம் – அவரது பெயரை குறிப்பிடாமல் படக் குழு வெளியிட்ட ப்ரோமோ வீடியோ.

0
1112
vikram
- Advertisement -

சினிமாவில் எந்த ஒருபின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்வது நடிகர் விக்ரம் தான். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”.

-விளம்பரம்-
விக்ரம்

நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 படத்தில் விக்ரம் உடன் இணைந்து அவரின் மகன் துருவ் விக்ரம் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இது ஒருபுறம் இருக்க பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

அதே போல நடிகர் விக்ரம், இந்தி படம் ஒன்றில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தகவல்கள் வெளியானது. மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

சென்ற ஆண்டு இந்த படம் கைவிட பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதனை திட்டவட்டமாக மறுத்தார் இயக்குனர் விமல். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து விக்ரம் விலகியதாக கூட சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விக்ரம் பெயரை குறிப்பிடாமல் இருப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இந்த படத்தில் விக்ரம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement