மறைந்த டிஐஜி விஜயகுமாரின் ஆசை குறித்து அவருடைய ஐபிஎஸ் நண்பர்கள் கண்ணீர் விட்டு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை சரக டிஐஜியாக பணியாற்றி இருந்தவர் விஜயகுமார். இவரின் சொந்த ஊர் தேனி. இவர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் பணியாற்றி இருக்கிறார். அதோடு கடந்து 2009 ஆம் ஆண்டு அரசாங்க தேர்வு எழுதி நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று இருந்தார்.

இதனை தொடர்ந்து இவர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கண்காணிப்பாளராக பணியாற்றி இருந்தார். மேலும், இவர் பணியில் இருந்த போது நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா, சாத்தான்குளம் இரட்டை கொலை போன்ற பல வழக்குகளை சிறப்பாக விசாரணை நடத்தி தீர்வு கண்டிருக்கிறார். பின் சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி இருந்தார் விஜயகுமார்.

Advertisement

அதன் பின் இவர் கோவையில் சரக டிஐஜி யாக கடந்த ஜனவரி மாதம் ஆறாம் தேதி பணியாற்றி இருந்தார். அதோடு இவருடைய மனைவி பெயர் கீதா வாணி. இவர் பல் மருத்துவர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருடைய பெயர் நந்திதா. இவர் சமீபத்தில் தான் நீட் தேர்வு எழுதி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் வழக்கம் போல் நடைபயிற்சி சென்று விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். பின் தன்னுடைய பாதுகாவலர் ரவியிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த சக காவலர்கள் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட தெரிந்தது. இதன்பின் ரேஸ் கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின் விஜயகுமாரின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரித்து இருந்தார்கள். அப்போது முதற்கட்ட விசாரணையில் குடும்ப விவகாரம் தொடர்பாக தான் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார் என்ற தகவல் வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பணி சுமை காரணமோ வேறு எதாவது காரணம் பிரச்சனை இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Advertisement

இவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் இவருடைய இறப்பிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை கூறியிருந்தார்கள். இந்த நிலையில் விஜயகுமாரின் மகளின் ஆசை குறித்து அவருடைய நண்பர்கள் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, விஜயகுமார் அவர்கள் தன்னுடைய மகள் நந்திதா டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பெற்றிருக்கிறார்.

Advertisement

இது தொடர்பாக அவருடைய ஐபிஎஸ் நண்பர்கள், விஜயகுமார் வேலை செய்து கொண்டிருக்கும் போது சிறுக சிறுக தன்னுடைய மகளுக்காக பணம் சேர்த்து வைத்திருந்தார். அதை வைத்து எப்படியாவது தன்னுடைய மகளை டாக்டராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதில் அவர் உறுதியாகவும் இருந்தார். எந்த சூழ்நிலையிலுமே அவர் யாரிடமும் கையேந்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால், இவர் இப்படி செய்து கொள்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்கள்.

Advertisement