‘பா’ நடிகைக்கு பாலியல் கொடுமை – காவியா மாதவனுக்கு முக்கிய பங்கு? கசிந்தது ஆடியோ ஆதாரம். நீதிமன்றம் உத்தரவு.

0
395
Dileep
- Advertisement -

பிரபல நடிகையின் பாலியல் பலாத்கார சம்பவத்தில் சாட்சியைக் கலைத்ததற்காக நடிகை காவியா மாதவன் மீது புகார் எழுப்பி விசாரணை நடத்தி தற்போது நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவன் உடந்தையாக இருந்தது தொடர்பான ஆடியோ ஆதாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள திரை உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் திலீப். இவர் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை 2017ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு சில ஆண்டாகவே நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கைது செய்தனர். 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நடிகர் திலீப் ஜாமினில் வெளியே வந்து இருந்தார்.

-விளம்பரம்-
Dileep Kumar Fir Report | திலீப் குமாரின் FIR ரிப்போர்ட்

மேலும், இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருக்கிறது.இப்படி ஒரு நிலையில் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது திலீப் குறித்து கூறி இருந்தார். அதில் அவர், நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இப்போது சிறையில் இருக்கும் பல்சர் சுனிக்கும் நடிகர் திலீப்புக்கும் ஏற்கனவே நட்பு இருந்தது.

- Advertisement -

மீண்டும் திலீப் கைது செய்யப்பட்ட காரணம் :

அதுமட்டும் இல்லாமல் நடிகர் திலீப் தன்னைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது பற்றிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த தகவலை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன். திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் பினராய் விஜயனுக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன் என்று பாலச்சந்திரகுமார் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகையும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-7.jpg

பிறகு நடிகர் திலீப்பை கைது செய்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் முடிவு செய்து இருந்தனர். பின் பாலசந்திரகுமார் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கோர்ட்டில் க்ரைம் பிராஞ்ச்சில் போலீஸ் பதிவு செய்திருக்கிறது.இந்நிலையில் இந்த வழக்கில் திலீப் சாட்சியங்களை அழிக்க முயன்றதாக திலீப் மனைவி காவ்யா மாதவன் மீது கேரளா குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

வெளியான ஆடியோ ஆதாரம் :

நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவியும், பிரபல நடிகை நடிகையான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் ஆலப்புழாவில் சேர்ந்த ஒருவர் திடீரென பல்டி அடித்தார். இதில் காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். இந்நிலையில், இவ்வழக்கில் நடிகர் திலீபின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு என குறிப்பிடும் செல்போன் ஆடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

This image has an empty alt attribute; its file name is 1-8-1024x576.jpg

காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் :

நடிகர் திலீப்பின் சகோதரியின் கணவர் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த ஆடியோக்கள் மூலம், பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக விசாரணைக் குழுவினர் இந்த மூன்று செல்போன் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த விசாரணைக்கு வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Advertisement